இடப்பெயர்வு வழமையான விடயமாகிப்போனது, தமிழன் வாழ்வில்.
நானும் இடம்பெயர்ந்துவிட்டேன், புதிய வலைப்பதிவிற்கு.
புதிய வலைப்பதிவு முகவரி: http://1paarvai.adadaa.com/
உங்கள் வரவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இடப்பெயர்வு வழமையான விடயமாகிப்போனது, தமிழன் வாழ்வில்.
நானும் இடம்பெயர்ந்துவிட்டேன், புதிய வலைப்பதிவிற்கு.
உங்கள் வரவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்பான வலைப்பதிவு நடத்துனர்களே,
…தமிழர்களின் கலாச்சார, பொழுதுபோக்கு, மற்றும் பாரம்பரிய அம்சங்களை வெளிக்காட்டும் விதமாக WordPress Theme அமைத்துத் தரும்படி வேண்டிக்கொள்கிறேன்.
…
அன்பான வலைப்பதிவாளர்களே. உங்கள் எல்லோருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் _/|\_
என்னடா இவன் இப்படி தொடங்குறானே என்று பார்க்கிறீர்களா? உங்க உதவி வேணும் அது தான். அட அது ஒண்ணுமில்லீங்க. தமிழ் வலைய வரலாற்றில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கலாம் என்று இருக்கிறேன்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கா தெரியவில்லை. சில தினங்களுக்கு முன் நான் ஒரு நல்ல இணையத்தள முகவரி தெரிவுசெய்து தரச்சொல்லிக் கேட்டிருந்தென் [உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன].
அப்படி நான் கேட்டு விட்டதிற்கு விழியன் ஒரு பரிந்துரை செய்திருந்தார் [ நன்றி விழியன்] “அடடா”. அடக் க்டவுளே நான் எத்தனையோ இணையத் தள முகவரி தேடிப்பார்த்து விட்டேன். ஒன்றுமே கிடைக்கலைங்க. நிசமாலுமே என்ற இடுகையைப் பார்த்தா உங்களுக்கே தெரியும் [உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன].
அவர் சொன்ன adada.com உம் இல்லை. ஆனா adadaa.com இருந்திச்சு.
மூன்றெழுத்தா இருந்திச்சா, அடடா. “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் …” என்று நானும் பாடலாமே என்று அதையே பதிவு செய்துவிட்டேன். அதாவது http://adadaa.com/
இப்ப அந்தத் தளத்தில் பெரிசா ஒண்ணும் இல்லீங்க. அது தொடங்கியே ஒரு கிழமை தான் வரும். ஆனா என்ன சிறப்பம்சம் என்றால், இது தான் உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு சேவையாக இருக்கும். அதாவது, WordPress.com, BlogSpot.com போன்று தமிழர்களால் தமிழர்களுக்காக நடத்தப்படும் சேவையாக இருக்கும் [என்னடா சனநாயகத்திற்கு இலக்கணம் கொடுப்பது போல் கொடுக்கிறானே என்று யோசிக்கிறியளா?].
சரி சரி நீங்க என்ன யோசிக்கிறீங்க என்று தெரியுது. இதை விட நாங்க WordPress.com ஓ (அ) BlogSpot.com இலோ புது பதிவை திறந்திடுவோமே என்று. BlogSpot.com பல பிரச்சினைகளைக் கொடுக்குது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். WordPress பிளாக்கரை முந்தி விடுமோ என்று கூட இடுகைகள் வரத்தொடங்கி விட்டது. இன்றைக்கும் பிளாக்கர் வேலையே செய்யாமல் கிடந்தது. அதைவிட நீங்கள் பதிந்ததை வெளியுலகிற்கு காட்ட ஒவ்வொரு முறையும் மீள் பிரசுரிக்க [Republish] வேண்டியிருக்கு.
சரி இதுல முக்கியமான point என்னெண்டா, “அடடா“வில் நிறுவி உள்ள வலைப்பதிவு சேவைச் செயலி WordPress.com செயலியே தான்!
அட ஆமாங்க. WordPress.com என்பது ஒரு திறந்த மூலச் செயலி [Open source code]. ஆகவே வேர்ட்பிரஸ்.காம் இற்கும் “அடடா” விற்கும் ஒரு வித்தியாசமும் இருக்காது. [ஐஐயோ சின்ன சின்ன வித்தியாசம் இருக்குங்க. அதை அப்புறமா விபரமா விளக்குறன்.]
சரி ஆனா இப்ப அடடா.காம் ஒரு அல்ஃபா [alpha] நிலையில் தான் இருக்கு. அதாவது ஒருவரும் புதிதாக வலைப்பதிவு அடடா.காம் இல் தொடங்க இயலாது. அப்ப பிறகென்னதிற்கு இந்த பில்டப்பு என்று கேட்கிறியளா? அடடா.. அதுக்குத்தானே சுத்தி சுத்தி வாரன்.
இப்படி கனக்க இருக்குங்க. அதுக்கு உங்கட உதவி தேவை. உங்களுக்கு இதில் விருப்பம் இருந்தால் இங்கே பின்னூட்டமாக இடவும் (அ) எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும். அட மின்னஞ்சல் முகவரியை மறக்காமல் அதன் கட்டத்திற்குள் போடவும்.
உங்களுக்கு JavaScript, PHP, MySQL என்று எதாவது சாடையான் அறிவு இருந்தால் போதும். அட அப்படி இல்லைனா கூட உங்களுக்கு உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு சேவையை உருவாக்க ஆர்வம் இருந்தா காணுமே. தமிழாக்கத்திலும், சோதனை செய்வதிலும் பங்கெடுக்கலாமே.
அட நான் ஏதும் பணம் பண்ண யோசிக்கிறன் என்று யோசிக்கிறியளோ.
வேர்ட்பிரச், பிளாகர் என்று எல்லாமே இலவசமாக கொடுக்க நான் காசுக்கெண்டு சொன்னா யாராச்சும் வருவாங்களா? இல்லையே. அடடா.காம் கூட இலவசம் தானுங்க. வேர்ட்பிரசில் இல்லாத தீம் எடிட்டிங் [theme editing] அடடாவில் கொடுக்கலாம் என்று இருக்கிறன். அதற்கு தான் சில சோதனைகள் செய்துகிட்டு இருக்கிறன். மேலும் அதிகமான் தீம்கள் [themes]. ஒவ்வொரு வலைப்பதிவாளரும் தத்தம் குறுஞ்செயலிகளை [plug-ins] தாங்களே நிர்வாகிக்கக்கூடியதாக [plug-in manageability] அமைக்கலாம் என்றும் இருக்கிறேன். இன்னும் கனக்க இருக்குங்க. எல்லாம் சோதனை செய்துகிட்டு இருக்கிறேன்.
அதற்கு உங்கட உதவியும் தேவை. அதற்கு தான் இந்த இடுகை. உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன் 2!
அட முக்கியமான் விடயத்தைச் சொல்லவே இல்லை. இன்றிலிருந்து 30 நாட்களில் அடடா.காம் வை இணையத்தில் வெளியிடலாம் என்று இருக்கிறேன். அதாவது, 30 நாட்களுக்குள் சோதனை எல்லாம் முடிந்து எவரும் ஒரு வலைப்பதிவை தொடங்க அனுமதிக்கலாம் என்று திட்டம். அட நேரம் போறதே தெரியலை. வாங்க எல்லோரும் சேர்ந்து உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு சேவையைக் கட்டி எழுப்பலாம்!.
_____
CAPital
பி.கு.: எனது “ஒரு படம்” வலைப்பதிவைத் தான் அடடா வில் சோதனை செய்து வருகிறேன்.
_____
CAPital