ஒரு பார்வை

June 28, 2006

ராஜீவ் காந்தியின் கொலை தப்பா? … [01]

Filed under: India,LTTE,War of Tamil Eelam — CAPitalZ @ 1:01 pm

“Prabhakaran learnt it on television that the Accord had been signed and they were not party to it. It was one reason why the LTTE never accepted the Accord and India’s stand.

If we had taken the LTTE into confidence, they would have known the whole thing, their terms would have been put across to Jayewardane, and the situation would have been different.”
– Major General Harkirat Singh, the Indian Peace Keeping Force’s first commander
http://www.rediff.com/news/2000/mar/30lanka.htm

பல இந்தியர்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல், புலிகள் இந்திய-இலங்கை ஒப்பந்ததில் கையொப்பமிடவில்லை. தலைவரை விடுதிக் காவலில் [Hotel Arrest] வைத்திருந்தே ராஜீவ் காந்தியும், J.R. ஜெயவர்த்தனாவும் கையொப்பமிட்டார்கள். தமிழருக்கு உண்மையிலேயே உதவத் தான் இந்தியா வருகிறதென்றால், ஏன் இவ்வாறு ஒரு கபட நாடகம் ஆடவேண்டி இருந்தது? தலைவர் இந்த ஒப்பந்த கைச்சாத்திடலை, அவர் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விடுதியில் இருந்த தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொள்கிறார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், இந்தியா இலங்கைத் தமிழர்களுக்காக பரிந்துரை செய்த அரசியல் கட்டமைப்பு, இந்தியா தன் மாநிலங்களுக்குக் கொடுத்துள்ள கட்டமைப்பை விட குறைவானதாகவே இருந்தது. இதை ஏற்க தலைவர் மறுத்துவிட்டார். யானைப் பசிக்கு கீரைப்பிடியை இந்தியா திணிக்க முற்பட்டது. ஏன் இந்த ஓரவஞ்சனை என்பதற்கு பலர், இந்தியா இலங்கைத் தமிழருக்கு இப்படி சலுகை கொடுத்தால், தனது மாநிலங்களும் மேலும் சலுகைகள் கேட்க ஆரம்பித்துவிடும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படியோ, தமது பரிந்துரையை ஏற்க மறுத்த விடுதலைப் புலிகளை, இந்தியா ஒழிக்க முற்பட்டது.

ஆயுதங்களை ஒப்படைத்த பின், போராளிகளுக்கும் சிறையில் இருக்கும் போறாளிகளுக்கும் பொது மன்னிப்பு வளங்குவதென்பது தான் ஆயுத ஒப்படைப்பின் உத்தரவாதமாக இருந்தது. புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து பின் நிராயுதபாணியாக பிரயாணஞ் செய்த குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இந்திய இராணுவம் தன் பாதுகாப்பை விலக்கி இலங்கை இராணுவத்திடம் கைவிட்டது. இலங்கை இராணுவம் சிறைப்பிடித்தது. சாமாதானப் படையாக இந்தியா தமிழீழம் முழுவதும் இருந்தும், குமரப்பா, புலேந்திரன் அவர்களை விடுவிக்க புலி கோரியும், இந்தியா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இறுதியாக தலைவர் சயனைட் குப்பிகளை குடுத்தனுப்பி அவர்கள் அத்தனை பேரும் தமிழீழத்துக்காய் சிறையிலேயே தற்கொலை செய்தார்கள்.

தமிழர் பிரதேசத்தில் இந்திய இராணுவம் எதற்காக நிலைகொள்ள வேண்டும்? புலிகளை ஒழிக்கவே வந்தார்கள் என்பததைத் தவிர வேறு எந்த நியாயமான கருத்தும் கூற இயலாது.

இப்படிப்பட்ட உண்மைகள் இந்திய மக்களுக்கு போய்ச்சேரவிலை. இந்திய அரசாங்கம் அவை சென்றடையாமல் செய்ததாலேயே இன்றைக்கும், பல இந்தியர்கள் புலிகள் தான் துரோகம் செய்தார்கள், இந்தியா தமிழருக்கு உதவே வந்தது என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவே இந்தியா மீது புலிகள் போர் என அறிவிக்க காரணம். மத்தியஸ்தம் செய்ய வந்து, தமிழீழம் பூராகவும் இராணுவத்தை நிலைநிறுத்தி, ஆயுதங்களையும் ஒப்படைக்க வைத்து, நிராயுதபாணியாக இருந்தவர்களை ஒப்புக்கொண்டது போல் பொது மன்னிப்பு கொடுக்காமல் துரோகம் செய்தது இந்தியா; கைப்பற்றியவர்களை விடுதலை செய்யவோ, கண்டிக்கவோ இல்லை. துரோகம் செய்த ராஜீவ் காந்திக்கு தேச துரோகத்திற்கு என்ன தண்டனையோ அதையே புலிகள் வளங்கினார்கள். இந்தியாவிலும், தேச துரோகத்திற்கு மரணம் தான் தண்டனையே.

இந்திய இராணுவம் தமிழீழம் முழுவதிலும் இருக்கிறது. இலங்கையைச் சுற்றிக் கடல். தலைவர் இலங்கையில். இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. இவ்வளவு இருந்தும், இந்தியாவுடன் போர் என்று அறிவிக்க எவ்வளவு தூர நோக்குப் பார்வை, துணிச்சல், எதிர் கால பிரச்சனை என்றேல்லாம் சிந்தித்திருக்க வேண்டும்.

இந்திய இராணுவம் சமாதானப் படையாக இருந்த பொழுது, இந்திய பொருட்கள் தமிழீழத்தில் அதிகமாக கிடைத்தன. அதில் ஒன்று நெருப்பெட்டி [தீப்பெட்டி]. நெருப்பெட்டியில், ஒரு பக்கத்தில் படம் இருப்பது வழமை. இந்திய நெருப்பெட்டியில் இருந்த படம், ஒரு புலி பாய்கிறது, எதிரே நெற்பயிர்கள் அறுவடை செய்யும் அரிவாள். இந்தியாவில் கூட அப்படி ஒரு நெருப்பெட்டி விற்பனை செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. தமிழர்களுக்காகவே செய்யப்பட்ட போல் அந்த நெருப்பெட்டி. இந்தியா சும்மா வரவில்லை, கபட நோக்கத்தில் தான் வந்துள்ளது என்று எங்களுக்கு அப்பவே தெரிந்தது.

இந்திய-இலங்கை ஒபந்தம் யாருக்கு நன்மை? இந்தியா சிங்கள அரசாங்கத்துடன் கைகோர்த்து தமிழரை அழிக்க ஒரு ஒப்பந்தம். புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தார்கள். லொறி லொறியாக ஆயுதங்கள் ஒப்படைக்கப் பட்டன. அதைப் பார்த்து நாங்களே யோசித்திருக்கிறோம், இனி புலிகளால் தலை எடுக்க இயலாது என்று. என்ன புலிகள் முட்டாள்களாக இவ்வளவு ஆயுதங்களையும் ஒப்படைக்கிறார்களே என்று. ஆனால், MGR ஆயுதங்களை கொடுத்தார், களவாக, இந்திய அரசாங்கம் அல்ல. இந்தியா இராணுவத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்த பின் மீண்டும் எப்படி ஆயுதம் வந்தது என்பதை தலைவரின் வரலாற்று VCD ஐ வாங்கி பார்க்கவும். அதில் தலைவரே சொல்கிறார் MGR தான் ஆயுதம் தந்தார் என்பதை.

அந்தக் காலத்தில் சிங்களப் படை பெண்களை பலவந்தம் செய்தது கிடையாது (அ) அரிது. இந்திய இராணுவம் வந்த பின்பே பெண்களும் பயப்பட ஆரம்பித்தார்கள். ஒரு சந்தியில் புலி குண்டு வைத்து வெடித்தால், அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டிலுள்ளவர்களுக்கு சணல் பறந்த அடி. அதில் வயது வித்தியாசம் இல்லை. அந்தக் காலத்தில் சிறுவர்களோ, பெண்களோ, வயோதிபர்களோ இயக்கத்தில் இருந்தது கிடையாது. இந்திய இராணுவம் தான் பாகுபாடின்றி எல்லோருக்கும் பயத்தை உண்டுபண்ணியது.

இந்திய இராணுவத்தில் “para troops” என்று ஒரு பிரிவு உள்ளது. அவர்கள் சற்று குள்ளமாகவே இருப்பார்கள். இவர்களிடம் ஒரு வாள் இருக்கும்; கறுப்பு உடை அணிவார்கள். இந்திய இராணுவத்திலேயே இவர்கள் தான் மோசமானவர்கள். அப்போ இலங்கை இராணுவம் ஒரு வீட்டிற்கு அதன் முன்வழியாலேயே வருவார்கள். இந்திய இராணுவம் அப்படி இல்லை. வேலியைப் பிய்த்துக் கொண்டு வருவார்கள். திடீர் திடீர் என்று வருவார்கள். இதனாலேயே, பெண்கள் குளிக்கப் பயப்பட்டார்கள். தனியாக இருந்த பெண்களிடம் தப்பாக நடந்தது.

இவை போன்று பல கசப்பான சம்பவங்களே இந்திய இராணுவத்துடன் தமிழீழ மக்களுக்கு. இந்திய இராணுவத்தை விட சிங்கள இராணுவமே மேல் என்று நினைத்த காலங்கள் அவை. இந்திய இராணுவத்திடமிருந்து கற்ற்குக்கொண்டதைத் தான் இப்போது சிங்கள இராணுவம் செய்து வருகிறது. எங்கள் நாட்டிற்கு படை அனுப்பி, பலரைக் கொன்று, பல சித்திரவதைகள், வயது வித்தியாசம் இல்லாமல் அடிகள், கற்பழிப்புகள் எல்லாம் செய்த இந்தியாவின் மீது எவ்வளவு கோபம் இருக்கும்?

இவ்வளவுக்கும் காரண கர்த்தாவான ராஜீவ் காந்தி மீண்டும் பிரதமராக தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால், மீண்டும் ஓர் அச்சுறுத்தல் தமிழீழ மக்களுக்கு வரலாம்.

ராஜீவ் கொலை, ஒரு பழிவாங்கல் என்பதை விட ஒரு அச்சுறுத்தல் ஆகவே செய்யப்பட்டது. இன்னும் ஒருமுறை இராணுவத்தை அனுப்பாமல்; ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய வேண்டுகோள்களுக்கு முட்டுக்கட்டையாக இந்தியா இருக்காமல்; எம்மை அழிக்க இனிமேலும் முற்பட வேண்டாம் என்று ஒரு அச்சுறுத்தல்.

தலைவரை முல்லைத்தீவில் சுற்றிவளைத்து விட்டார்கள் இன்னும் 13 மைல்கள் தான் இருக்கிறது; இன்னும் 11 மைல்கள் தான் இருக்கிறது என்று இந்தியா சொல்லிக் கொண்டிருக்க, தலைவர் மாவீரர் நாள் என நவம்பர் 27ம் திகதியை அறிவிக்கிறார். சுவர்களில் சுவரொட்டிகள். இந்தியா சொன்னது, பிரபாகரனை நாங்கள் கொன்றுவிட்டோம். அது தான் நவம்பர் 27. மக்களுமே இதை நம்பினார்கள். சில மைல்கள் தான் இருக்கு என்று இருக்கையில், இப்படி ஒரு மாவீரர் நாள் என அறிவிக்க தலைவர் இறந்து விட்டார் என எண்ணவே தோன்றும்.

இந்தியா அன்று எமது தலைவர் பிரபாகரனை கொன்றது [செய்தியின் படி] சரி என்றால், இந்தியாவின் தலைவர் ராஜீவ் காந்தியைக் கொன்றதுவும் சரியே. இதை எவ்வாறு இந்தியர்கள் தப்பு என்று சொல்ல முடியும்?

அன்று ஜப்பான், அமெரிக்கா அணு குண்டைப் போட்ட பின், தாங்கள் அமெரிக்கா மீது போர் தொடுத்தது பிழை என்று ஜப்பானிய அரசர் முட்டுக்காலாலேயே நடந்து ஜப்பானிய மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அன்றைக்கு அறிவித்தது போல், இன்றுவரை ஜப்பான் போருக்காக எங்கும் இராணுவம் அனுப்பியது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் “Ministry of Defence” கூட இல்லாமல் “Agency of Defence” என்னும் குறைந்த செயற்குழுவாகவே இன்னும் ஜப்பான் அரசியலில் உள்ளது.

அன்று ராஜீவ் காந்தியைக் கொன்ற படியால் தான் இன்றுவரைக்கும், இந்தியா இன்னும் ஒருமுறை படை அனுப்பாமல் இருக்கிறது. அன்று தலைவர் எடுத்த முடிவு சரி என இன்று வரலாறு சாட்சி சொல்கிறது. அதே போல், எப்போதும் எமது தலைவர் எடுக்கும் முடிவு ஒரு தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய சரியான முடிவாகவே இருக்கும். ஒரு தலைவரிடம் இருக்க வேண்டிய தொலை நோக்குச் சிந்தனை நமது தலைவரிடம் நிறையவே இருக்கிறது. அதனால், தற்சமயம் பிழை என எண்ணத் தோன்றும் முடிவுகளும், நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தால், அது சரி என வரும்.

இந்திரா காந்தி, அவரின் மெய்க்காப்பாளர்களாக இருந்த சீக்கியர் இருவர்களால் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார். இதற்காக பஞ்சாப்பை இந்தியா தள்ளியா வைத்துவிட்டது? இந்திரா காந்தியை கொன்றபின் பஞ்சாப் காரர்களை இந்திய மக்கள் கொன்றார்களா, இலங்கைத் தமிழர்களை தமிழ் நாட்டில் வெட்டிக் கொன்றது போல்? பஞ்சாப் காரர்களுக்கு அரச பாடசாலைகளில் படிக்க இயலாது என்னும் சட்டம் கொண்டுவரப்பட்டதா இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ் நாட்டில் நிகழ்ந்தது போல்? அரச பாடசாலைகள் அல்லாத சில பாடசாலைகளும் இலங்கைத் தமிழரை ஒதுக்கியது [“சோ”]. மேலும் சொல்லப் போனால், இப்போது ஒரு சீக்கியர் இந்திய முதலமைச்சராக வருவதற்கு இந்திரா காந்தியின் மருமகளான, சோனியா காந்தி பெருந்தன்மையாக உதவியிருக்கிறார். ராஜீவ் காந்தியை புலி கொன்றது பிழை என்று மட்டும் இந்தியர்கள் வெறுக்கிறார்களா (அ) வேறு எதாவது காரணம் இருக்கிறதா?

பிராந்திய வல்லரசு; அயல் நாடு; தமிழீழத்தைச் சுற்றிக் கடல் [அந்தக் காலத்தில் கடற்புலிகளும் இல்லை]; இவைக்கும் மத்தியில் இந்தியாவை எதிர்த்தால், புலிகளுக்கு பெரும் நட்டம் என்பதில் ஒரு துளி கூட ஐயப்பாடில்லை. இருந்தாலும் அரசியல் இலாபத்திற்காக தமிழர்களின் சுயநிர்ணயத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்ததாலேயே புலிகள் தமிழர்களின் மனதின் உயரத்தில் குடிகொண்டார்கள். தமிழனின் வரலாறு சொல்கிறது, போரில் வெற்றி தோல்வியை விட இறந்தவனுக்கு அம்பு முதிகில் பாய்ந்ததா (அ) மார்பில் பாய்ந்ததா என்பதே முக்கியமாக பார்க்கப்பட்டது என்று. அன்று இந்தியாவை எதிர்த்து புலி பூண்டோடு அழிந்திருந்தால், மார்பில் அம்பு பட்டவனாகவே வரலாற்றில் இடம் பெற்றிருக்கும்.

தற்போது இருக்கும் மற்றய குழுக்கள், தமிழருக்காய் தான் போராடுகிறோம் என்று சொல்லி தமிழரின் சுயநிர்ணயத்தை விற்கிறார்கள். இது தான் புலிகளுக்கும், மற்றய இயக்கங்களுக்கும் உள்ள வித்தியாசம்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப் பட்ட முறை தான் பிழை என்றால், அன்று கண்ணன் குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களுக்கு உதவிய முறைகள் அத்தனையும் பிழைதானே. ராஜீவ் காந்திக்கு தண்டனை வழங்கும் பலம் புலிகளிடம் இல்லை. கண்ணன் குறுக்கு வழியில் பாவம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கியது போல், புலிகள் தங்களிடம் இருந்த பிரம்மாஸ்திரத்தை பாவித்தார்கள்.

எமது சுயநிர்ணயத்தை விற்று பிச்சை வாங்கும் தமிழர்கள் அல்ல நாம்; நாங்கள் விடுதலைப் புலிகள் என்று வரலாறு எழுதட்டும்.

பாகம் – 02 >>

_____
CAPital

12 Comments »

 1. Well said Mr.Capital. I respect your sentiments. The liberation of Ealam is not far away.

  Comment by Thenisai — June 30, 2006 @ 2:35 pm | Reply

 2. Pl wait and see

  Comment by naesh — August 1, 2006 @ 10:54 am | Reply

 3. //இந்திரா காந்தியை கொன்றபின் பஞ்சாப் காரர்களை இந்திய மக்கள் கொன்றார்களா, இலங்கைத் தமிழர்களை தமிழ் நாட்டில் வெட்டிக் கொன்றது போல்?//
  இது மிக மூடத்தனமான வாதம். தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டார்கள், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்கள் என்பது தவிர யாரும் எந்த ஈழத்தமிழரையும் கொன்றதில்லை. ஏன் இப்படிப் புளுகுகிறீர்கள்.
  டில்லியில் இந்திரா படுகொலைக்குப்பின் சீக்கியர்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்படார்களே, படுகாயப்படுத்தப்பட்டார்களே அதையெல்லாம் அறியாமல் இல்லாத ஒன்றை இருப்பதாகவும் இருப்பதை இல்லாததாகவும் கூறுவதை நிறுத்துங்கள்.

  ராஜீவ்காந்தி கொலைபற்றிய உங்கள் நியாயங்களின் பலன் தான் இன்று தமிழகம் புலிகளுக்கு எதிராக இருப்பது. தமிழன் தமிழனை நேசித்ததைவிட அந்த நேரு குடும்ப இளவலை நேசித்தான். அதை அறியாமல் செய்தார்கள் அது உங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதை மறுக்க ஏலுமா

  Comment by சபா — August 11, 2006 @ 5:26 am | Reply

 4. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.
  அந்தக் கால கட்டத்தில் தமிழ் நாட்டில் வசித்து வந்த எனது நண்பனின் வீடு தேடி காடையர்கள் கொல்வதற்காக வந்தார்கள். அவன் இருந்த வீட்டு வயோதிப அம்மையார் வீட்டில் ஒரு ஈழத்தமிழனும் இல்லை என்று பொய் சொல்லியதால் அவன் அன்று தப்பிக்கொண்டான். அப்படி தப்பாமல் இறந்தவர்களை அவன் பிறகு போய் அனுதாபம் தெரிவித்திருக்கிறான்.
   

  ______
  CAPital

  Comment by CAPitalZ — August 11, 2006 @ 8:49 am | Reply

 5. […] புலிகள் ராஜீவ் காந்தியை கொல்வதற்கு மூல காரணமே இந்தியா தான்! நாங்கள் வளர்த்த புலிகள் எது சொன்னாலும் தலையை ஆட்டுவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு புலிகளின் ஒப்புதல் இல்லாமலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆயுத ஒப்படைப்பின் பின் போராளிகளுக்கு பொது மன்னிப்புத் தரப்படும் என்று சொன்ன இந்தியா புலி வீரர்கள் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாயிருந்தது. [இது பற்றிய எனது இடுகை: ராஜீவ் காந்தியின் கொலை தப்பா? ] […]

  Pingback by ஒரு பார்வை » இந்தியாவின் புலி - 1 — August 15, 2006 @ 2:39 pm | Reply

 6. […] புலிகள் ராஜீவ் காந்தியை கொல்வதற்கு மூல காரணமே இந்தியா தான்! நாங்கள் வளர்த்த புலிகள் எது சொன்னாலும் தலையை ஆட்டுவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு புலிகளின் ஒப்புதல் இல்லாமலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆயுத ஒப்படைப்பின் பின் போராளிகளுக்கு பொது மன்னிப்புத் தரப்படும் என்று சொன்ன இந்தியா புலி வீரர்கள் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாயிருந்தது. [இது பற்றிய எனது இடுகை: ராஜீவ் காந்தியின் கொலை தப்பா? ] […]

  Pingback by இந்தியாவின் புலி - 01 « ஒரு பார்வை — September 5, 2006 @ 11:08 am | Reply

 7. ராசிவ் கொலைக்குக் காரணம் உண்மையில் அதுதானா?

  மிகவும் இணக்கமாக இருந்த பிரேமதாசா சரியாக ஒருவருடங்கழி்த்து கொழும்புவில் கொல்லப்பட்டாரே, அது யார் கூறியதன் பேரில் நடைபெற்றது? பிற்பாடு புலிகளை பயங்கரவாதிகள் என்று அறிவித்து பொருளாதர அமைப்பை சீர்குலைக்கும் முயற்சிக்கு அடிகோலியது யாராம்?

  போங்கப்பா, கண்ணாடி முன் நின்று உண்மை எது என்று சுய பரிசோதனை செய்து கொண்டு பேசுங்கள். ராசிவ் கொலையை இந்திய மக்கள் மறக்க இன்னும் குறைந்தது 30 வருடங்களாவது ஆகும். அது வரை எந்த ஊருக்கு யார் ராசாவோ.. பார்க்கலாம்.

  Comment by படகோட்டி — March 14, 2007 @ 12:20 pm | Reply

 8. Allright,
  Your title: “Was killing rajiv a mistake” was not upto my expectation. When we talk about two countries..India and Eelam(a defacto stato, at least), arguing from the moral point of view does not make any sense. It is not about two brothers or friends fighting to look at morals or to determine who was morally wrong. Instead, It will be the diplomacy and International strategy.The action of killing Rajiv Gandhi was not just a strategic mistake, it was a massive, strategic blunder.Even Pirabakaran has accepted that. However, if it makes you feel happy, yes Rajiv was wrong, morally. ok?

  Comment by eelavendhan — June 12, 2007 @ 3:57 pm | Reply

 9. ராசிவ் கொலைக்குக் காரணம் உண்மையில் அதுதானா?

  மிகவும் இணக்கமாக இருந்த பிரேமதாசா சரியாக ஒருவருடங்கழி்த்து கொழும்புவில் கொல்லப்பட்டாரே, அது யார் கூறியதன் பேரில் நடைபெற்றது? பிற்பாடு புலிகளை பயங்கரவாதிகள் என்று அறிவித்து பொருளாதர அமைப்பை சீர்குலைக்கும் முயற்சிக்கு அடிகோலியது யாராம்?

  போங்கப்பா, கண்ணாடி முன் நின்று உண்மை எது என்று சுய பரிசோதனை செய்து கொண்டு பேசுங்கள். ராசிவ் கொலையை இந்திய மக்கள் மறக்க இன்னும் குறைந்தது 30 வருடங்களாவது ஆகும். அது வரை எந்த ஊருக்கு யார் ராசாவோ.. பார்க்கலாம்.

  ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
  எந்த மேடையில் ஐயா தம் கூட்டணி ஒற்றுமையின் எதிர்காலத்தைப் பற்றி பறைசாற்றினார்கள் தலைவரும், பிறேமதாசாவும்,
  கதைக்க கருத்துக்கு பஞ்சம் என்றால் இப்படி சின்னப் புள்ளதனமான காரணமா எடுத்து விடுவது.
  சாக்கடை அரசியலே சொல்லுது நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை தன்னுள் என்று, எனவே ஒரு ஒழுக்கமான போராட்டமா இந்த நயவஞ்சக நட்புக்கு வழிவிட்டு தன் கொள்கையைத் துலைக்க வேண்டும் என்றா சொல்கிறீர்கள்.

  Comment by தேவன் — June 27, 2007 @ 5:42 pm | Reply

 10. நான் இந்த வலைப்பதிவை இடப்பெயர்த்துவிட்டென். புதிய முகவரி

  http://1paarvai.adadaa.com/

  நன்றி

  Comment by CAPitalZ — June 28, 2007 @ 7:36 am | Reply

 11. […] எனது இடுகை: ராஜீவ் காந்தியி&… […]

  Pingback by ஒரு பார்வை » Blog Archive » இந்தியாவின் புலி - 1 — April 25, 2008 @ 10:21 pm | Reply

 12. […] “புலிகள் ராஜீவ் காந்தியை கொல்வதற்கு மூல காரணமே இந்தியா தான்! நாங்கள் வளர்த்த புலிகள் எது சொன்னாலும் தலையை ஆட்டுவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு புலிகளின் ஒப்புதல் இல்லாமலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆயுத ஒப்படைப்பின் பின் போராளிகளுக்கு பொது மன்னிப்புத் தரப்படும் என்று சொன்ன இந்தியா புலி வீரர்கள் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாயிருந்தது. [இது பற்றிய எனது இடுகை: ராஜீவ் காந்தியி&…]” […]

  Pingback by ஒரு பார்வை » Blog Archive » தேன்கூடு - ஏன் என்னை தடைசெய்தாய்? — April 25, 2008 @ 10:58 pm | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: