ஒரு பார்வை

October 26, 2006

உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு சேவை!

Filed under: Internet,Thamizh,WordPress — CAPitalZ @ 11:04 pm

அன்பான வலைப்பதிவாளர்களே. உங்கள் எல்லோருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் _/|\_

என்னடா இவன் இப்படி தொடங்குறானே என்று பார்க்கிறீர்களா? உங்க உதவி வேணும் அது தான். அட அது ஒண்ணுமில்லீங்க. தமிழ் வலைய வரலாற்றில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கலாம் என்று இருக்கிறேன்.

உங்களுக்கு ஞாபகம் இருக்கா தெரியவில்லை. சில தினங்களுக்கு முன் நான் ஒரு நல்ல இணையத்தள முகவரி தெரிவுசெய்து தரச்சொல்லிக் கேட்டிருந்தென் [உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன].

அப்படி நான் கேட்டு விட்டதிற்கு விழியன் ஒரு பரிந்துரை செய்திருந்தார் [ நன்றி விழியன்] “அடடா”. அடக் க்டவுளே நான் எத்தனையோ இணையத் தள முகவரி தேடிப்பார்த்து விட்டேன். ஒன்றுமே கிடைக்கலைங்க. நிசமாலுமே என்ற இடுகையைப் பார்த்தா உங்களுக்கே தெரியும் [உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன].

அவர் சொன்ன adada.com உம் இல்லை. ஆனா adadaa.com இருந்திச்சு.

மூன்றெழுத்தா இருந்திச்சா, அடடா. “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் …” என்று நானும் பாடலாமே என்று அதையே பதிவு செய்துவிட்டேன். அதாவது http://adadaa.com/

இப்ப அந்தத் தளத்தில் பெரிசா ஒண்ணும் இல்லீங்க. அது தொடங்கியே ஒரு கிழமை தான் வரும். ஆனா என்ன சிறப்பம்சம் என்றால், இது தான் உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு சேவையாக இருக்கும். அதாவது, WordPress.com, BlogSpot.com போன்று தமிழர்களால் தமிழர்களுக்காக நடத்தப்படும் சேவையாக இருக்கும் [என்னடா சனநாயகத்திற்கு இலக்கணம் கொடுப்பது போல் கொடுக்கிறானே என்று யோசிக்கிறியளா?].

சரி சரி நீங்க என்ன யோசிக்கிறீங்க என்று தெரியுது. இதை விட நாங்க WordPress.com ஓ (அ) BlogSpot.com இலோ புது பதிவை திறந்திடுவோமே என்று. BlogSpot.com பல பிரச்சினைகளைக் கொடுக்குது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். WordPress பிளாக்கரை முந்தி விடுமோ என்று கூட இடுகைகள் வரத்தொடங்கி விட்டது. இன்றைக்கும் பிளாக்கர் வேலையே செய்யாமல் கிடந்தது. அதைவிட நீங்கள் பதிந்ததை வெளியுலகிற்கு காட்ட ஒவ்வொரு முறையும் மீள் பிரசுரிக்க [Republish] வேண்டியிருக்கு.

சரி இதுல முக்கியமான point என்னெண்டா, அடடா“வில் நிறுவி உள்ள‌ வலைப்பதிவு சேவைச் செயலி WordPress.com செயலியே தான்!

அட ஆமாங்க. WordPress.com என்பது ஒரு திறந்த மூலச் செயலி [Open source code]. ஆகவே வேர்ட்பிரஸ்.காம் இற்கும் “அடடா” விற்கும் ஒரு வித்தியாசமும் இருக்காது. [ஐஐயோ சின்ன சின்ன வித்தியாசம் இருக்குங்க. அதை அப்புறமா விபரமா விளக்குறன்.]

சரி ஆனா இப்ப அடடா.காம் ஒரு அல்ஃபா [alpha] நிலையில் தான் இருக்கு. அதாவது ஒருவரும் புதிதாக வலைப்பதிவு அடடா.காம் இல் தொடங்க இயலாது. அப்ப பிறகென்னதிற்கு இந்த பில்டப்பு என்று கேட்கிறியளா? அடடா.. அதுக்குத்தானே சுத்தி சுத்தி வாரன்.

  • இந்த அடடா வலைப்பதிவு சேவையை முழுமையாக தமிழாக்கம் செய்ய வேண்டும்.
  • தமிழ் “தீம்” [theme] கள் தயாரிக்க வேண்டும்.
  • தமிழ்மணம் பதிவு பட்டையை இயங்க வைக்க வேண்டும்.
  • தமிழ் எழுத்துக்களுக்கு என்று சிறப்பான சில சேவைகளை வலைப்பதிவு இடத்திலேயே வழங்க வேண்டும்.

இப்படி கனக்க இருக்குங்க. அதுக்கு உங்கட உதவி தேவை. உங்களுக்கு இதில் விருப்பம் இருந்தால் இங்கே பின்னூட்டமாக இடவும் (அ) எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும். அட மின்னஞ்சல் முகவரியை மறக்காமல் அதன் கட்டத்திற்குள் போடவும்.

உங்களுக்கு JavaScript, PHP, MySQL என்று எதாவது சாடையான் அறிவு இருந்தால் போதும். அட அப்படி இல்லைனா கூட உங்களுக்கு உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு சேவையை உருவாக்க ஆர்வம் இருந்தா காணுமே. தமிழாக்கத்திலும், சோதனை செய்வதிலும் பங்கெடுக்கலாமே.

அட நான் ஏதும் பண‌ம் பண்ண யோசிக்கிறன் என்று யோசிக்கிறியளோ.

வேர்ட்பிரச், பிளாகர் என்று எல்லாமே இலவசமாக கொடுக்க நான் காசுக்கெண்டு சொன்னா யாராச்சும் வருவாங்களா? இல்லையே. அடடா.காம் கூட இலவசம் தானுங்க. வேர்ட்பிரசில் இல்லாத தீம் எடிட்டிங் [theme editing] அடடாவில் கொடுக்கலாம் என்று இருக்கிறன். அதற்கு தான் சில சோதனைகள் செய்துகிட்டு இருக்கிறன். மேலும் அதிகமான் தீம்கள் [themes]. ஒவ்வொரு வலைப்பதிவாளரும் தத்தம் குறுஞ்செயலிகளை [plug-ins] தாங்களே நிர்வாகிக்கக்கூடியதாக [plug-in manageability] அமைக்கலாம் என்றும் இருக்கிறேன். இன்னும் கனக்க இருக்குங்க. எல்லாம் சோதனை செய்துகிட்டு இருக்கிறேன்.
அதற்கு உங்கட உதவியும் தேவை. அதற்கு தான் இந்த இடுகை. உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன் ‍‍ 2!

அட முக்கியமான் விடயத்தைச் சொல்லவே இல்லை. இன்றிலிருந்து 30 நாட்களில் அடடா.காம் வை இணையத்தில் வெளியிடலாம் என்று இருக்கிறேன். அதாவது, 30 நாட்களுக்குள் சோதனை எல்லாம் முடிந்து எவரும் ஒரு வலைப்பதிவை தொடங்க அனுமதிக்கலாம் என்று திட்டம். அட நேரம் போறதே தெரியலை. வாங்க எல்லோரும் சேர்ந்து உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு சேவையைக் கட்டி எழுப்பலாம்!.
_____
CAPital

பி.கு.: எனது “ஒரு படம்” வலைப்பதிவைத் தான் அடடா வில் சோதனை செய்து வருகிறேன்.

9 Comments »

  1. The first tamil blog service provider was yarl.net (Service ran successfully for a long time)
    The second one was tamilpayani/blog (Still running)
    The third one was thozhi (http://www.thozhi.com/blog/help/twblog.htm) (Still running)
    The forth one was tamilblogs.com (This service is by request)
    The fifth one?

    Comment by Someone — October 27, 2006 @ 7:12 am | Reply

  2. yarl.net site is not working currently so I am unable to verify.
    tamilpayani/blog is also not working. tamilpayani.com works but the blogging part is not working.
    http://www.thozhi.com is working
    tamilblogs.com is a blog aggregator. It doesn’t let users to create their own blog.

    So currently only http://www.thozhi.com is working. So Adadaa.com cannot be the first in the world. But hey Adadaa.com uses the WordPress.com engine. It is quite powerfull blog engine on the web currently.

    _______
    CAPital

    Comment by CAPitalZ — October 27, 2006 @ 9:08 am | Reply

  3. தவறான தகவல். முந்தைய பின்னூட்டக்காரர் சொன்னது போல உங்களுக்கு முன்பே பலர் வந்துவிட்டார்கள். அவர்கள் சேவை வேலை செய்கிறதா என்பது வேறு விஷயம்.

    Comment by சாத்தான் — October 30, 2006 @ 5:14 am | Reply

  4. நன்றி சாத்தான், உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

    சாத்தானே, எல்லோரும் வலைப்பதிவு இணையம் வைத்திருக்கிறார்களே ஒழிய, மற்றவர்கள் அதில் புதிதாய் ஒரு வலைப்பதிவு தொடங்கும் வசதி இல்லை. அப்படி இருப்பது ஒரே ஒரு இடமான http://www.thozhi.com . அடுத்து இந்த http://adadaa.com/ ஆகத் தான் இருக்கும்.

    _______
    CAPital

    Comment by CAPitalZ — October 30, 2006 @ 10:08 am | Reply

  5. அதனால் என்ன நண்பா . யாமுள்ளோம் , தமிழில் உருப்படியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அது நமக்கும் மகிழ்ச்சிதான் . நீங்கள் ஆரம்பியுங்கள் . வாழ்த்துக்கள் .என்னால் ஆன உதவிகளை நான் செய்யத்தயார் .

    Comment by tamilcomputer — October 31, 2006 @ 8:51 am | Reply

  6. […] ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்கக்கூடிய எனது தமிழ் வலைப்பதிவு சேவை ஐ adadaa.com இல் பூர்ணா ராஜாராமனின் உதவியுடன் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். […]

    Pingback by ஒரு பார்வை » Blog Archive » WordPress செய‌லியை ஏற்க‌னே நிறுவி ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ளுக்கு ஒரு வேண்டுகோள் — November 7, 2006 @ 11:50 am | Reply

  7. sir,
    This is Really useful site,
    A small sugestion please Add your web in New Tamil Songs for the world people,
    visit at http://movies-tv-songs.com
    thanking you….

    Comment by santhosh — August 23, 2007 @ 6:09 am | Reply

  8. I’m amazed, I must say. Rarely do I encounter a blog that’s
    both educative and interesting, and without a doubt, you’ve hit
    the nail on the head. The issue is something not enough men and women are speaking intelligently about.
    Now i’m very happy that I came across this during my hunt for something concerning
    this. – Cecilia

    Comment by turistinfo — July 27, 2018 @ 4:46 pm | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a reply to Someone Cancel reply

Blog at WordPress.com.