ஒரு பார்வை

October 3, 2006

இடுகைகளில் தமிழில் தலைப்பு வைக்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை

Filed under: Tamil Unicode,WordPress Tips — CAPitalZ @ 10:39 am

வலைப்பதிவில் இடுகைகள் இடும்போது, தமிழில் தலைப்பை வைப்பதினால் சில தொழில்நுட்ப சிக்கல்களுக்குள் தள்ளப்படுகிறார்கள், நமது தமிழ் வலைப்பதிவாளர்கள். அவற்றை சரி செய்ய வழியை இங்கே தருகிறேன்.

ஒருங்குறித் தமிழ் கணினியில் வேலை செய்தாலும், எல்லா இடங்களிலும் ஒருங்குறித் தமிழ் வேலை செய்யாது. இதற்குக் காரணம் தமிழ் இரண்டாம் தர மொழியாக ஒருங்குறியில் ஏற்றப்பட்டதே. [மேலும் அறிய தமிழ் ஒருங்குறி?!]

உங்கள் இடுகைகளை தமிழ் தலைப்பில் சேமிக்கும்போது வலைப்பதிவு மென்பொருள் அந்த தலைப்பை இணைய முகவரியாக எடுத்துக்கொள்கிறது. ஆனால், “போ” என்பது இணைய முகவரி இடும் இடத்தில் அப்படி சரியாகத் தெரியாது. அது இணைய முகவரிகளை சேமிக்கும் முறையில் மாற்றியே தெரியும். அது மட்டுமல்லாமல் “போ” என்பது தமிழ் ஒருங்குறியில் 2 குறிகள். ஒரு குறி அல்ல. அப்படித் தான் தமிழ் ஒருங்குறி அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நீங்கள் உங்கள் இடுகைக்கு “நான்” என்று தலைப்பைக் கொடுத்தால் அது உண்மையில் 4 குறிகள். இணைய முகவரிக்கு 255 எழுத்துக்களை தாண்டக் கூடாது என்பது விதியாகும். இப்போது நீங்கள் ஒரு பெரிய தமிழ் பெயரைக் கொடுத்தால், மீதமுள்ள எழுத்துக்கள் காணாமல் போய்விடும். அப்போ உங்கள் இடுகைகள் தெரியாமல் “404 – Page Not Found” என்று காட்டும் அல்லது பின்னூட்டமிட முடியாமல் இருக்கும். இந்த 255 எழுத்துக் கட்டுப்பாடே இதற்குக் காரணம்.

இதே 255 எழுத்து கட்டுப்பாடுதான் தமிழ் குழுமங்களில் தமிழில் தலைப்பை வைத்து அதற்கு மறுமொழி மின்னஞ்சலூடாக அனுப்பும்போது இழை பிரிந்து புதியதோர் இழை உருவாகுகிறது. ஒரு மிக நீண்ட எழுத்துக்களைக் கொண்ட தலைப்பில் கடைசியில் சில ஒருங்குறி குறிகள் வெட்டப்பட்டாலுமே அவை புதிய இழையாகிவிடும். கவனிக்கவும். நான் இங்கு எழுத்து என்னும்போதெல்லாம் தமிழின் ஒரு எழுத்தைக் குறிப்பிடவில்லை. தமிழ் “போ” என்பது ஒருங்குறியில் 2 குறிகள். அதே இணைய முகவரியில் இந்த இரண்டு குறிகளுமே மேலும் பல குறிகளாக மாற்றித் தான் உபயோகப்படுத்தப்படுகிறது. தமிழில் இரண்டெழுத்து தலைப்பு இணைய முகவரியாகும்போது பல எழுத்துக்கள்!
இதை சரி செய்ய வழிகள்:

  1. இடுகைகளுக்கு எந்தத் தலைப்பையும் கொடுக்காமல் முதலில் பிரசுரியுங்கள். வலைப்பதிவு மென்பொருள் [WordPress/ Blogspot] தானாகவே ஒரு இலக்கத்தைக் கொடுத்து சேமிக்கும். பின் அந்த இடுகையை திருத்த முயற்சி செய்து [edit], உங்களுக்கு விருப்பமான தலைப்பை கொடுக்கவும். இப்போ உங்கள் இடுகை ஒரு இலக்கமாக சேமித்து இருந்தாலும், மற்றவர்களுக்கு இடுகைத் தலைப்பு சரியாக உங்கள் விருப்பம் போல் தெரியும்.
  2. இடுகைகக்கு ஆங்கில தலைப்பைக் கொடுங்கள். பிரசுரித்த பின் மீண்டும் திருத்த முயற்சி செய்து [edit] உங்களுக்கு விருப்பமான தலைப்பை [தமிழிலோ] கொடுக்கலாம். இப்போ உங்கள் இடுகை ஆங்கில சொற்களால் சேமித்து இருந்தாலும், மற்றவர்களுக்கு இடுகைத் தலைப்பு சரியாக உங்கள் விருப்பம் போல் தெரியும்.
  3. WordPress உபயோகிப்பவர்களுக்கு மட்டும்:
    நீங்கள் புதிய இடுகை எழுத எத்தணிக்கும் போது உங்கள் வலது புறத்தில் சிறு சிறு தகவற் துளி போல் இருக்கும். அதில் “Post Slug” என்பதைக் கண்டு பிடியுங்கள். அதற்கு அருகாமையில் இருக்கும் ‘+’ சக குறியை தட்டி விரித்தால், ஒரு பெட்டி வரும். அந்தப் பெட்டிக்குள் நீங்கள் விருப்பமான ஆங்கில (அ) எண்ணில் தலைப்பை கொடுக்கலாம். அதே நேரத்தில் “Write Post” என்பதற்கு கீழ் உள்ள “Title” என்னும் இடத்தில் தமிழில் தலைப்பைக் கொடுக்கலாம். இது மேலே சொல்லப்பட்ட மேலதிக வேலையை இல்லாமல் ஆக்குகிறது.

Wordpress' Post Slug not expanded

Wordpress' Post Slug expanded

Wordpress' Post Slug and Title filled

பி.கு.: தேடு தளங்கள் [Search engines] இணைய முகவரியில் வரும் சொற்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். ஆகவே, நீங்கள் உங்கள் இடுகையை எண் கொடுத்து சேமித்தால் (அ) “blog-spot_25” என்று சேமித்தால் உங்கள் இடுகையை கண்டுபிடித்து அதிக புள்ளி கொடுக்கும் சந்தர்ப்பம் குறையும். நீங்கள் ஆங்கில/ தமிழ் சொற்களில் சேமித்தால், அந்த சொற்களை தேடும்போது உங்கள் இடுகைக்கும் முக்கியத்துவம் கூட கொடுக்கப்படும், தேடு தளங்களால்.

ஆனால் இன்னும் ஒருங்குறியின் இரண்டாம் தர மொழிகளுக்கு [தமிழ் உட்பட] இணைய முகவரியில் போதுமான உதவி இல்லாததால், தமிழின் ஒவ்வொரு எழுத்துக்களும் “%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%” இப்படி குதர்க்கமாக பிரித்து தான் தெரியும். நீங்கள் உங்கள் இடுகையின் முகவரியை வேறொருவருக்கு கொடுக்க எத்தணிக்கும்போதோ (அ) உங்கள் வலைப்பதிவு பயனர் உங்கள் இடுகையின் இணைய முகவரியை வேறொருவருக்கு கொடுக்க விரும்பினால் உங்கள் இடுகையின் இணைய முகவரி மிக நீண்டதாக, குதர்க்கம் நிறைந்ததாக காணப்படும்.

சிறிய இணைய முகவரியாக வருவதற்காகவும், தேடு தளங்களில் உங்கள் இடுகையின் மதிப்பு அதிகரிக்கவும் இடுகைகளை ஆங்கில சொற்கள் [உங்கள் இடுகையின் கருத்து பொறிந்த சொற்கள்] கொண்டு சேமித்தல் நன்று என்பது என் அறிவுறை.
இந்த இடுகைக்கு நான் தமிழில் தலைப்பைக் கொடுத்திருக்கிறேன். ஆனால் ஆங்கில சொற்கள் கொண்டு “post-slug-tamil-unicode-webpage-address-255” சேமித்து இருக்கிறேன். இந்த சொற்களைத் தேடினால், எனது இடுகை தெரியட்டும் என்பதற்காக.
______
CAPital

8 Comments »

  1. […] ஒருங்குறி உதவி வருங்காலத்தில் சகல மென்பொருளிலும் வழங்கப்படும். அதில் ஐயமில்லை. ஆதலால், எதிர்காலத்தில் தமிழுக்கு பிரச்சனை இருக்காது. ஆனால், மற்றய இடர்களான இடம், வேகம் என்பன இருந்து கொண்டே தான் இருக்கும்.என்னதான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும், இன்னமும் பலருக்கு கணினியே கிட்டாத நிலை தானே நிலவுகிறது. அப்படியாயின், ஒருங்குறி வேலை செய்யக்கூடிய கணினி கிட்ட இன்னும் எத்தனை காலம் எடுக்கும் என்பதை எதிர்காலம் பதில் சொல்லும். இவ்வளவு காலமும் தமிழுக்கு ஒரு பின்னடைவே. மற்றய மொழிகள் வளர்ந்து கொண்டு வருகையில் தமிழ் மிக மெதுவாகவே துளிர்க்கிறது. இணைய முகவரி 255 எழுத்துக்களுக்குள் இருத்தல் வேண்டும். தமிழில் இணைய முகவரி வைத்தால் இந்த கட்டுப்பாட்டை இலகுவாக தாண்டும். இதை இப்போதே சில வலைப்பதிவாளர்களின் இடுகைகளில் கவனிக்கலாம். மேலதிக எழுத்துக்கள் வெட்டப்படுவதால் ஒழுங்காக வேலை செய்யாமல் போய்விடும்.   [மேலும் அறிய இடுகைகளில் தமிழில் தலைப்பு வைக்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை] இதை சரி செய்ய இன்னும் கொஞ்ச காலம் அதிகமாக தேவை. போராடிப் போராடியே பழக்கப்பட்டவர்கள் நாம். இதில் தோற்று விடுவோமா என்ன? […]

    Pingback by தமிழ் ஒருங்குறி ?! - 17 « ஒரு பார்வை — October 3, 2006 @ 10:49 am | Reply

  2. Thank you!

    Comment by bsubra — October 3, 2006 @ 5:40 pm | Reply

  3. மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.
    -கடல்கணேசன்

    Comment by கடல்கணேசன் — October 4, 2006 @ 1:16 pm | Reply

  4. பயனுள்ள தகவல்களுக்கு நன்றி

    Comment by நெல்லி — October 4, 2006 @ 8:31 pm | Reply

  5. […] சந்தர்ப்பம் இருக்கிறது.  மேலும் அறிய இடுகைகளில் தமிழில் தலைப்பு வைக்கும்… […]

    Pingback by அடடா (beta) » அடடா பொங்கல் வாழ்த்து! — January 14, 2007 @ 11:09 am | Reply

  6. அருமையிலும் அருமை….

    Comment by ரமேஷ் குழந்தைவேலு — November 9, 2007 @ 1:17 pm | Reply

  7. […] செய்யாமல் போய்விடும். [மேலும் அறிய இடுகைகளில் தமிழில் தலைப்பு வைக்கும்…] இதை சரி செய்ய இன்னும் கொஞ்ச காலம் […]

    Pingback by ஒரு பார்வை » Blog Archive » தமிழ் ஒருங்குறி ?! - 17 — January 26, 2008 @ 12:42 am | Reply

  8. நல்ல இடுகை..
    Chinathambi

    Comment by Chinathambi — May 25, 2010 @ 4:12 am | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: