தேன்கூடு
தமிழ் வலைப்பதிவுகளின் இணையம்
இது ஒரு தமிழ் வலைப்பதிவுகள் திரட்டி. இங்கே எனது வலைப்பதிவையும், சிறிது நாட்களுக்கு முன் தான் சேர்த்திருந்தேன். எனக்கு இப்படி தேன்கூடு என்னும் வலைப்பதிவுகளைத் திரட்டும் தளம் இருப்பதே தெரிந்திருக்கவில்லை. தமிழ்மணம் – தமிழ் வலைப்பதிவுகளின் (blog) பட்டியல் என்பது மட்டும் தான் அறிந்திருந்தேன். இதைவிட வலைப்பதிவு ஒன்றை இவ்வளவு இலகுவாக உருவாக்கலாம் என்று கூட எனக்கு அண்மைக்காலம் வரை தெரிந்திருக்கவில்லை. கூகிள் முத்தமிழ் குழுமத்தில் தான் நண்பர்கள் எனக்கு இதை அறிமுகப்படுத்தினார்கள். தேன்கூடு – தமிழ் வலைப்பதிவுகளின் இணையம் – இதில் எனது வலைப்பதிவை திடீரென்று அவர்களது பட்டியலிலிருந்து அகற்றிவிட்டார்கள்.
நான் தொடங்கிய முதல் வலைப்பதிவு “ஒரு பார்வை” அனைத்து விடயங்களைப் பற்றி எனது கருத்துக்களைத் தெரிவிக்கும் வலைப்பதிவாக அமைத்தேன். அதனோடு எனது கணினி சம்பந்தமான துணுக்குகளையும் இடுவதுண்டு.
தமிழ்மணம் தளத்தில் எனது வலைப்பதிவை இணைத்த பின்பும் எனது இடுகைகள் அவர்களது வலைத்தளத்தில் தெரியவில்லை. காரணம், எனது வலைப்பதிவு WordPress.com என்னும் இயங்கு தளத்தில் இருக்கிறது. தமிழ்மணம் தளத்தில் எனது வலைப்பதிவின் இடுகைகள், மற்றும் பின்னூட்டங்கள் தெரிய அவர்கள் வழங்கும் “‘பதிவு’ கருவிப்பட்டை” ஐ எனது வலைப்பதிவில் நிறுவ வேண்டும். WordPress.com இயங்கு தளம் எந்த ஒரு JavaScript (அ) template modification இற்கும் உரிமை அளிக்காத தளம். இதனால், தமிழ்மணம் தளத்தில் எனது வலைப்பதிவு சேர்க்கப்பட்டிருந்தாலும் அதன் முழு உபயோகத்தைப் பெறமுடியவில்லை.
இதற்காக blogspot.com இயங்கு தளத்திற்கு மாற்றலாம் என்று கூட சிந்திக்க அரம்ப்பித்தேன். எனக்கு “WordPress” என்னும் பெயர் எனது கருத்தை வெளி உலகுக்கு கொணரும் பெயராக பொருந்தி இருப்பதால், எனக்கு அதை விடவும் விருப்பமில்லாமல் இருந்தது. அதைவிட வேறொரு விடையத்தையும் கவனித்தேன். தேடு தளங்களில் [search engines] சில பொதுவான சொற்களைத் தேடும்போது கூட எனது வலைப்பதிவுகள் முதல் பக்கத்திலேயே காணக்கண்டேன். அந்த சொற்கள் வேறு தளங்களில் மூல கருத்தாக இருந்தும் கூட எனது தளம் முதலில் வருவது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தன. இதற்காக எனது தளத்தில் மேலதிகமாக நான் எதையும் நிறுவியது கிடையாது. அப்படியானால், WordPress.com இதற்கான வேலையை செவ்வனே செய்கிறது. இதனால், WordPress.com ஐ விட்டு பிரியாமல் நின்றுவிட்டேன்.
அடுத்ததாக தேன்கூடு தளத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே எனது வலைப்பதிவை சேர்க்க வேண்டுகோள் விடுத்தேன். அடுத்த 24 மணி நேரத்திற்குள் இணைத்துவிட்டார்கள். இங்கே எனது புதிய இடுகைகள், நான் எதையும் நிறுவாமல் (அ) சேர்த்துக்கொள்ளாமல், தானாகவே தெரிந்தன. எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
அதன்பின் நான் எழுதும் ஒவ்வொரு புதிய இடுகைகளும் தேன்கூடு தளத்தில் மலர்ந்தன. இப்படியான ஒரு இடுகை தான் இப்போது எனது வலைப்பதிவு அகற்றப்படுவதற்கும் காரணமாயிற்று.
நான் 2006/08/01 அன்று எழுதிய இடுகை “இந்தியாவின் புலி – 01“. இந்தியாவின் வெளிவிவகார செயற்பாடுகளும் புலிகளும் சம்பந்தமாக எழுதினேன். இதை பார்த்த தேன்கூடு தள ஆளுநர்கள் எனது தளத்தை அவர்களது பட்டியலிலிருந்து அகற்றி விட்டார்கள். எனக்கு இது தெரியவர நான் 2006/08/04 அன்று அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்.
May I ask why have you deferred my blog?
ttp://1paarvai.wordpress.com/
அன்றே எனக்கு மறுமொழி வந்தது.
We will get back to you regarding this soon.
________,
Thenkoodu Portal Support.
அதன் பின் பல தடவைகள் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன். எந்த காரணம் சொல்லியும் எந்த பதிலும் இதுவரை வரவில்லை.
நான் எழுதியது எந்த இனத் துவேசமாகவோ, (அ) மதத் துவேசமாகவோ இல்லை. பல மதத் துவேச வலைப்பதிவுகள் தேன்கூடு தளத்தில் இன்னும் புதிய இடுகைகளாக வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒரு ஈழத்தமிழனாக எனது மனக்குமுறலை எழுதியிருந்தேன். முஸ்லிம் – இந்து துவேசம் எழுத தடையில்லை; இஸ்ரேல் – ஃகெஸ்புல்லா பற்றி எழுத தடையில்லை; இந்தியா – பாகிஸ்தான் பற்றி எழுத தடையில்லை; புலி எதிர்ப்பு வலைத்தளங்கள் அனுமதிக்கபடுகின்றன. ஆனால் இந்தியா – புலி பற்றி எழுத தடையா? புலிகள் பற்றிய இடுகைகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால், புலிகளும் இந்தியாவும் பற்றி எழுத மட்டுமே தடைபோல் தெரிகிறது.
எனது கணிப்பில், கீழே உள்ள வரிகள் தான் எனது வலைப்பூ அகற்றப்பட்டமைக்கு காரணம் என்று தோன்றுகிறது.
“புலிகள் ராஜீவ் காந்தியை கொல்வதற்கு மூல காரணமே இந்தியா தான்! நாங்கள் வளர்த்த புலிகள் எது சொன்னாலும் தலையை ஆட்டுவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு புலிகளின் ஒப்புதல் இல்லாமலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆயுத ஒப்படைப்பின் பின் போராளிகளுக்கு பொது மன்னிப்புத் தரப்படும் என்று சொன்ன இந்தியா புலி வீரர்கள் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாயிருந்தது. [இது பற்றிய எனது இடுகை: ராஜீவ் காந்தியின் கொலை தப்பா?]”
உண்மை என்று மறைக்க முற்படுகிறார்களோ? நான் வேறோர் இடுகையில் எழுதியது சரி என்று இது நிதர்சனமாக்குகிறது.
சரி ஏதோ தேன்கூடு தளத்தில் கோளாறு போல் இருக்கும், ஏன் சும்மா அலட்டிக்கொள்கிறீர்கள் என்று சொல்கிறீர்களா? அப்படி ஒரு மறுமொழி வரும் என்று தான் இவ்வளவு நாளும் காத்திருந்தேன். ஆனால், தேன்கூடு தளம் எனது வீட்டிலிருந்து பார்க்கமுடியாத வண்ணம் செய்துவிட்டார்கள். எனது IP Address ஐ தடை செய்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். இதன் பின் தான் இந்த தேன்கூடு தளம் பற்றிய இடுகை.
_____
CAPital
சேர்க்கப்பட்டது I [GMT 2006/08/14 @ 10:22]
Dated: 2006/08/13 @ 11:04 [GMT-5]
Dear Blogger,
Thank you for choosing us. As per the rules of Thenkoodu.com – Tamil Blogs Portal,
We do not allow sites that feature adult content (nudity included), promote gambling, promote illegal activities, promote hate, feature warez, and/or are not blogs. We will also reject blogs intended to do nothing more than garner traffic for another site. This is to keep the directory and aggregator both useful and also to cut down on spam.
Especially promoting hate is our primary concern. We do not allow blogs that are written primarily against anything. (including anti islamic, anti hindu and anti anything for that matter.).
Sorry to say, Your blog has been kept on hold for further evaluation.
Our team will make a visit and take our best efforts to monitor and evaluate your blog, for inclusion in Thenkoodu.com – Tamil Blogs Portal soon. However,if you feel by any chance if there is mis-understanding in our part, please do let us know. This will fasten the process. We also, appreciate your support on understanding our requirements.
Regards,
Thenkoodu Portal Support.அப்படியே எனது மின்னஞ்சலில் வந்ததை மேலே கொடுத்துள்ளேன். மேலே தடிமனாக்கப்பட்ட சொற்கள் யாவும் நான் தேர்ந்தெடுத்து ஆக்கப்பட்டவை அல்ல.
========================================================
புதிய பதிவுகளின் திரட்டி ஒன்றை ஆரம்பிக்க நீங்களும் உதவ விரும்பினால் கீழ்க்கண்ட முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
pathivu-subscribe@yahoogroups.com
யாகூ குழும இணைய முகவரி
http://groups.yahoo.com/group/pathivu/
_____
CAPital
CAPital,
இப்போதுதான் எனக்கு
விளங்குகின்றது, ஏன் எனது
வலைப்பதிவையும்
தேன்கூட்டில் தடை
செய்தார்கள் என்று.
இத்தனைக்கும் எனது
பதிவுகள்:
http://vinnaanam.blogspot.com
இந்தியாவுக்கு எதிரானவை
அல்ல. ஈழப்பிரச்சினை
பற்றியதே. உங்கள் பதிவை
மட்டுமல்ல, எனது பதிவையும்
தேன்கூடு தடை செய்ததைப்
பார்க்கும் போது தேன்கூடு திரட்டி
ஈழத்தமிழர்களுக்கு எதிரான
சக்திகளால்
நிர்வகிக்கப்பட்டு
வருகின்றது போற்
தெரிகின்றது. இவர்கள்
யாருக்கு தமது சேவைகளை
வழங்குகின்றார்கள் என்பது
அந்த சோ(றோ)வுக்குத் தான்
வெளிச்சம்.
உண்மையை வெளிக்கொணர்ந்து
தேன்கூட்டின்
மறுபக்கத்தைத்
தெரியப்படுத்தியமைக்கு
நன்றிகள்.
அன்புடன்
விண்ணாணம்
http://vinnaanam.blogspot.com
Comment by விண்ணாணம் — August 11, 2006 @ 9:15 am |
இப்போது, தேன்கூடு, வீட்டிலிருந்து பார்க்க முடியாமல் இருந்த தடையை எடுத்து விட்டார்கள்.
______
CAPital
Comment by CAPitalZ — August 11, 2006 @ 10:52 pm |
ஈழத்தமிழருக்கு என்று ஒரு திரட்டியை உருவாக்க யாராவது முன் வரவேண்டும், ஆனால் தமிழ் மணம் அப்படி வேற்றுமை காட்டுவதில்லை, தனிமனித தூற்றுதல், ஆபாசமான வலைபதிவுகளைத்தான் அவர்கள் அனுமதிப்பதில்லை. தேன் கூடு மூர்த்தி என்பவரால் சிங்கப்பூரில் இருந்து நாடாத்தப்படுகிறது, இவர் பார்பணருக்கு எதிரானவர், அதேபோன்று புலிகளுக்கும் எதிரானவர், ஆனால் தமிழ் மணம் இல்லையேல் இவர்களால் இப்படி ஒரு திரட்டியை உருவாக்க முடியாது, எல்லாம் தமிழ்மணத்தை நிறுவிய காசி அண்ணனின் தயவு.
திரட்டியை உருவாக்க முடியாவிட்டாலும் ஈழத்தமிழருக்கு என ஒரு குழுமத்தை அமைப்பது நல்லதென நினைக்கிறேன், இதில் ஆர்வமுடையோர் கருத்தை கூறலாம், இடம் தேவையெனில் நான் தருகிறேன். www,eelabarathi.com இதை செய்யமுடியும், ஆனால் இதில் ஆர்வமுடயவர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் தேவை.
Comment by eelabarathi — August 26, 2006 @ 8:37 pm |
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நானும் இப்படித் தான் யோசித்தேன். ஆனால், அது பெரும் வேலை என்பதால் சற்று தயக்கம். முதலில் ஒரு பொதுவான பெயர் வேண்டும். இப்படி ஒரு பதிவுத் தொகுப்பு நடத்த ஒரு சிறு முன் அனுபவமாகவது (அ) அதைப் பற்றிய அறிவு சற்று தேவை.
______
CAPital
Comment by CAPitalZ — August 26, 2006 @ 9:09 pm |
ஈழத்தமிழர் என்றே பெயர் வைக்கலாம் அல்லது வேருபெயர்கள் பொருந்தினும் அவ்வாறேவைக்கலாம், முதலில் ஈழத்தமிழருக்கான ஒரு குழுமத்தையாவது ஆரம்பிக்கவேண்டும், இதை கோகுல் அல்லது யாகுவில் கூட ஆரம்பிக்க முடியும். குழுமம் அமைப்பது பெரும் வேலைப்பழு அல்லவென நினைக்கிறேன்.
Comment by eelabarathi — August 26, 2006 @ 9:15 pm |
இல்லை ஐயா, ஈழத்தமிழர் என்று பாகுபாடு வேண்டாம். தமிழ்மணம், தேன்கூடு போன்று ஒரு பொதுப் பெயர் வேண்டும். அந்தப் பெயரில் ஏதோ ஒரு நல்ல பொருள் இருக்க வேண்டும். பதிவுத் தொகுப்பு பற்றி எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. துவங்கினால், உதவுவேன் 😀 சரி குழுமத்தை யாகூவில் தொடங்கலாமா?
______
CAPital
Comment by CAPitalZ — August 28, 2006 @ 11:40 am |
தொடங்கலாமே நீங்களே தொடங்குகள். ஏதாவது பெயரில் ஒரு திரட்டியை உருவாக்குவது பற்றி விவாதிக்கவேண்டும். தொடக்கிவிட்டி அரியத்தாருங்கள் விவாதத்துக்காக காத்திருக்கிறேன்.
Comment by eelabarathi — August 28, 2006 @ 7:46 pm |
//
2. தமிழ்மணத்தின் தாய் நிறுவனம் (TMI LLC)பதிவு செய்யப்பட்டுள்ள நாட்டின் சட்டங்களுக்கு எதிராக அல்லது அச்சட்டங்களைப் பயன்படுத்தி, தமிழ்மணம் திரட்டிக்கொள்ளும் தனியாள் பதிவுகளுக்காக தமிழ்மணத்தின் மீது எவரேனும் வழக்கு தொடரப்பட வாய்ப்பளிக்கும் பதிவுகள்.
//
http://thamizmanam.blogspot.com/2006/08/blog-post_23.html
தமிழ்மணமும் கூட எந்த நேரத்திலும் இதே மாதிரி புலிகளுக்கு நேரடி ஆதரவு தரும், அல்லது புலிகளின் செய்தி தளங்களை, இந்தியாவின் ‘தடை செய்யப்பட்ட இயக்கம் புலிகள்’ என்ற அடிப்படையில் நிறுத்தி விடும்.
எனவே, புலிகள் ஆதரவிற்காக தனியாக ஒரு திரட்டி அமைக்க வேண்டியது நிச்சயம்.
Comment by கல்லாடன் — August 30, 2006 @ 3:46 am |
//பொதுவாக தமிழ்மணம் சார்பான மட்டுறுத்தல் அல்லது விலக்கல் என்பது இரண்டு காரணங்களை ஒட்டியே நிகழவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. தமிழ்மணத்தின் தாய் நிறுவனம் (TMI LLC)பதிவு செய்யப்பட்டுள்ள நாட்டின் சட்டங்களுக்கு எதிராக அல்லது அச்சட்டங்களைப் பயன்படுத்தி, தமிழ்மணம் திரட்டிக்கொள்ளும் தனியாள் பதிவுகளுக்காக தமிழ்மணத்தின் மீது எவரேனும் வழக்கு தொடரப்பட வாய்ப்பளிக்கும் பதிவுகள்.//
http://thamizmanam.blogspot.com/2006/08/blog-post_23.html
தமிழ்மணத்தினையும் எதிர்பார்க்க முடியாது. மேலே சொல்லியிருப்பது போல இந்தியாவில் தடை செய்யப்பட்ட புலிகளை தீவிரமாக ஆதரிக்கும் தளம் என்று சொல்லி அவர்களும் தடை விதிக்கக் கூடும். எனவே தனித் திரட்டியே ஒரே தீர்வு. உடனடியாக குழு ஒன்றினை உருவாக்க வேண்டும்.
Comment by கல்லாடன் — August 30, 2006 @ 2:11 pm |
நன்றி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
உங்களையும் புதிதாய் உருவாக்கிய பதிவு யாகூ குழுமத்தில் சேர்த்திருக்கிறேன்.
_______
CAPital
Comment by CAPitalZ — August 30, 2006 @ 3:46 pm |
நன்றி கேபிட்டல்,
தமிழ்மணத்தில் இடுகைகளைப் அனுப்ப ‘இடுகைகளைப் புதுப்பிக்க’ என்னும் இடத்திலுள்ள பெட்டியில் முகவரியை இட்டால் போதும். அப்படி இட்டாலும் உங்கள் வலைப்பதிவு பிழை என்றே செய்தி வருகிறது.
http://validator.w3.org/feed/check.cgi?url=https://1paarvai.wordpress.com/feed/
இதில் பாருங்கள் உங்கள் ஓடையில் பிழையேதும் இல்லை.
தமிழ்மணத்திலும் உங்கள் பதிவை தடை செய்திருக்கிறார்கள்.
Comment by கல்லாடன் — August 31, 2006 @ 4:44 am |
கேபிட்டல்
தமிழ்மணத்திலே உங்கள் பதிவு தடைசெய்யப்பட்டிருக்கிறதா? அப்படியானால்
தமிழ்மணத்திலே உங்கள் பதிவைத் தடை செய்திருக்கின்றார்களா என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பி அவர்களிடமே கேட்கலாமே?
உங்கள் பதிவு தமிழ்மணத்திலே தடை செய்யப்பட்டிருக்கிறதென்றால் அதை கல்லாடன் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியிருப்பது வெட்கக்கேடு
Comment by நா. குமணன் — September 1, 2006 @ 12:11 am |
முதலில் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் பல.
ஒரு மடல் தமிழ்மணத்திற்கு அனுப்பி இருக்கிறேன். பார்ப்போம்.
_______
CAPital
Comment by CAPitalZ — September 1, 2006 @ 9:21 am |
http://groups.google.com/group/noolaham/browse_thread/thread/383c76581dddc8e6/eb3445199cd91fcd#eb3445199cd91fcd
Please note Thenkoodu.com – Tamil blogs portal, once
again strongly disagrees that it promotes only anti-eelam sites, and blocks
eelam related posts!! It\’s impossible for our team to go through each post
and find out whether it belongs to eelam or anti eelam, that too when we
ourselves not aware what is eelam related and anti eelam related posts! We
could only act upon the complaints we receive. We appreciate if such
discussions were carried over with authentic information or examples instead
of generalized statements. This will help us to evaluate ourselves too!
—
Further comments on thenkoodu\’s policy on websites:
First of all, until today we were not aware, how does the concept of
Thenkoodu blocking Eelam blogs comes in to picture?
Although this is not a right forum to explain, we are forced to put our
case, because some of our respected bloggers are here and we got the link to
our blogger Mr.Capital\’s compliant about his blog in another forum only from
here. (Thanks for that link! we have not been notified about this until
today.)
1) The blogger Mr.Capital was never blocked from accessing
Thenkoodu.com.
This could be purely due to his own network issue or some other issue. We DO
NOT have any mechanism to block the user by IP address! That was a wrong
statement.
2) The blogger Mr.Capital has been notified promptly for the reason for his
blog to be put on hold for monitoring. We did mention to him, if he felt
there is any mistake in our part, please do contact us. However we have not
received any reply from him until today. (These communications have not been
posted on another forums mail by the blogger.) We are waiting for the review
about his blog and his blog might be included for aggregation as soon as
possible after the review.
3) For the blogs that are not blogs – purely a copy paste blog of some other
magazines – will be accompanied in the news page,if found to be fit.
As you all might be aware, Thenkoodu team does care for our bloggers views.
We request any bloggers who has such concern please do contact us directly
and also in case if you have any doubts on our process too. Thanks for
understanding.
WE SHOULD JOIN TOGETHER AND EXPOSE THESE BASTARDS. BE IT THAMIZMANAM OR THENKOODU.
CAPitalZ, did you get any mail from thenkoodu?
Comment by nameless — September 1, 2006 @ 11:02 am |
The mail is already added here in the post. Read at the end of this post. Thenkoodu might be refering this only.
சேர்க்கப்பட்டது I [GMT 2006/08/14 @ 10:22]
Dated: 2006/08/13 @ 11:04 [GMT-5]
Comment by nameless2 — September 1, 2006 @ 4:08 pm |
I’ll write answers to those questions asked later, but I need to tell one thing.
thamizmanam didn’t block me. It just that my url has to be https://1paarvai.wordpress.com/feed
Comment by CAPitalZ — September 1, 2006 @ 4:17 pm |
வணக்கம் Capital
தேன்கூட்டின் பின்னணி குறித்த பிரச்சினை நூலகம் குழுமத்தின் மடல்களில் வாசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களுடைய மடல்களை இந்த வலையில்
http://groups.google.com.py/group/noolaham?hl=es
உள்ளன.
இம்மடல்களில் தங்களுடைய, மற்றும் எனது பதிவுகளின் தடைகள் பற்றிய விடயங்களும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தன. இது குறித்து தேன்கூட்டினர் நூலகம் குழுவுக்கு அநுப்பியிருந்த தெளிவில்லாத (?) பதில் மேலே பின்னூட்டமாக ஒரு பெயரில்லாதவர் தந்திருக்கிறார். அவருக்கு நன்றி.
இந்தத் தேன்கூட்டினரின் தடைக்கு நாங்கள் மட்டும் பலியாகவில்லை. பலரது பதிவுகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அதில் ஆச்சரியம் என்னவென்றால் தடை செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஈழத்தவர்கள் என்பதுவும் ஈழத்துக்கு சார்பாக எழுதுபவர்களுமே.
இதற்கு அவர்கள் இப்போது புதுக் காரணம் வேறு கண்டுபிடித்துக் கூறியுள்ளார்கள். அந்தப் பதிவுகள் அனைத்தும் வெறுமனே மற்ற செய்தித்தாள்களில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டவையாம். அவை பதிவுகள் அல்லவாம்.
நூலகத்தில் இந்தப்பிரச்சினை கிளப்பப்பட்டபின் என்னுடைய பதிவுகளையும் தேன்கூட்டில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. (எனக்கு அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை).
புதிய பதிவுத்தொகுப்பு ஒன்று தொடங்குவதற்கு என்னுடைய முழு ஆதரவைத் தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால் எனக்கு இதில் அறிவு பூச்சியம்:)
Comment by VinnaaNam — September 1, 2006 @ 10:10 pm |
http://www.thenkoodu.com/?mode=news
seems, capital is already there in there aggregated list of thenkoodu:
http://www.thenkoodu.com/aggregated.php?query=&page=1100&limit=50
Comment by «¦É¡ýö¦Á¡¯î — September 2, 2006 @ 10:48 am |
[…] << பாகம் – 01 […]
Pingback by தேன்கூடு - ஏன் என்னை தடைசெய்தாய்? - 02 « ஒரு பார்வை — September 2, 2006 @ 12:55 pm |
[…] On your email dated September 03rd you have mentioned “As we have informed earlier in our mail (dated 13th), your blog received complaints on the category such as promoting hate.” I would like to point out that in your email dated 13th you did not mention anything about that you received complaints and that is why its being deferred. I am also attaching your email in Annex I [bloggers: please see at the bottom of my first post for the email at தேன்கூடு – ஏன் என்னை தடைசெய்தாய்? ] […]
Pingback by தேன்கூடு - ஏன் என்னை தடைசெய்தாய்? - 03 « ஒரு பார்வை — September 13, 2006 @ 10:27 pm |
[…] On your email dated September 03rd you have mentioned “As we have informed earlier in our mail (dated 13th), your blog received complaints on the category such as promoting hate.” I would like to point out that in your email dated 13th you did not mention anything about that you received complaints and that is why its being deferred. I am also attaching your email in Annex I [bloggers: please see at the bottom of my first post for the email at தேன்கூடு – ஏன் என்னை தடைசெய்தாய்? ] […]
Pingback by Re: Contact-Us Feedback from Thenkoodu.Com « One Letter — September 13, 2006 @ 10:42 pm |
[…] On your email dated September 03rd you have mentioned “As we have informed earlier in our mail (dated 13th), your blog received complaints on the category such as promoting hate.” I would like to point out that in your email dated 13th you did not mention anything about that you received complaints and that is why its being deferred. I am also attaching your email in Annex I [bloggers: please see at the bottom of my first post for the email at தேன்கூடு – ஏன் என்னை தடைசெய்தாய்? ] […]
Pingback by ஒரு பார்வை » Blog Archive » தேன்கூடு - ஏன் என்னை தடைசெய்தாய்? - 03 — October 26, 2006 @ 11:34 am |
Home Networking & பிரயோசனமான வெப்தளங்கள்
http://my.domainindia.org
Comment by satheesh — June 14, 2007 @ 6:01 am |
[…] your email in Annex I [bloggers: please see at the bottom of my first post for the email at தேன்கூடு – ஏன் எனĮ… […]
Pingback by ஒரு பார்வை » Blog Archive » தேன்கூடு - ஏன் என்னை தடைசெய்தாய்? - — April 25, 2008 @ 10:45 pm |