ஐயா அகிம்சை வழி பேசும் இந்தியனே, காந்தியைக் கொன்றபின்னே காந்தியின் அகிம்சை வழியையும் கொன்றுவிட்டீர்கள்.
பாகிஸ்தானுடன் போர், பங்களாதேஷுக்கு படை அனுப்பு உதவி, பஞ்சாப்பில் படுகொலைகள் இலங்கையில் படை அனுப்பி அட்டூழியம் எல்லாம் செய்துவிட்டு, நாங்கள் அகிம்சாவாதிகள் எங்களைப் போல் பின்பற்றுங்கள் என்று பேதை போல் பிதற்றாதீர்கள். ஏன் இப்போது கூட பாகிஸ்தான் படையை பின்வாங்கினால் தான் நாங்களும் படையைப் பின் வங்குமோம் என்று அடம் பிடிக்கிறீர்கள். கார்கிலில் பல உயிர்கள் இழப்பை அகிம்சைவழியிலா இழந்தீர்கள்?
அகிம்சை வழியில் போகவேணும் என்று நினைத்திருந்தால் ஏன் இந்தியா அணுகுண்டு தயாரித்தது? ஐக்கிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தும் அணு குண்டை செய்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிச் செய்தவர்கள் தானா அகிம்சாவாதிகள்?
நாங்கள் தமிழன் என்பதால் எங்களுக்கு வேறு நீதியோ? இருக்கலாம் தமிழன் பாவப்பட்ட ஜென்மம் தானே.
நான் புலிகள் செய்வது முற்றுமுழுதக சரி என்று சொல்ல வரவில்லை. ஆனால், இந்தியா ஒன்றுமே செய்யவில்லை, புலிகள் தான் முதுகில் குற்றிவிட்டார்கள் என்று சொல்வதைத் தான் பிழை என்கிறேன்.
அகிம்சைவழி சுதந்திரப் போராட்டத்தில் போராடிய தியாகிகளுக்கு இன்னும் ஒழுங்காக அரசங்க உதவிகள் போய்ச் சேரவில்லையாம். முதலில் அதைப் போய்க் கவனியுங்கள். பாவம் கிழவன் மண்டையைப் போடக்குமுதலாவது நிம்மதியைக் குடுங்கோப்பா. [நாங்களும் செய்திகள் வாசிக்கிறனாங்கள்.]
_____
CAPital
you are 100% correct.
Comment by mayoo — July 2, 2006 @ 6:09 am |
வாழ்த்துக்கள் நண்பரே.
சமாதானம் என்று சொல்லிக்கொண்டு ஒருலட்ச்சத்து நாற்பதாயிரம் இந்திய துருப்புக்கள் எங்கள் நாட்டுக்குள் புகுந்து, குழந்தைகள், வயதானவர்கள் என்ற வயது வேறுபாடு இல்லாமல் ஆறாயிரத்துக்கு மேலான அப்பாவி பொது மக்களை கொன்றார்கள்.
தமிழகத்து மக்களுக்கு இந்த செய்திகள் போய் சேராமல் கவனமாக ஊடகத்துறையை கையாண்டு கொண்டு இருக்கிறார்கள் அன்றைய, இன்றைய ஆட்ச்சியாளர்கள். ராஜீவ் காந்தி அவர்கள் இறந்த பின்னர் ஆட்ச்சிக்கு வந்தவர்கள் அவர்களின் ச(சா)தியின் அடக்கு முறைதான் இன்று தமிழக நண்பர்களுக்கு உண்மை நிலைமை புரியாமல் இருப்பது.
இந்தியாவை காந்திய தேசம் என்கிறார்கள். அன்று இந்திய ராணுவம் அப்பாவி பொதுமக்கள் மேல் டாங்கரை ஏற்றி சென்றதை நேரில் பார்த்த அன்று நினைத்தேன்.
இந்தியாவா காந்தி தேசம்? என்று. பெண் புலிகள் உருவானதற்க்கு மூலகாரணமே இந்திய அமைதிப்படைதானே.
எங்கள் ஈழம் மலரும் நாளுக்காய் காத்திருப்போம்.
மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் தமிழ் மண் குளிக்கும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
நன்றி, வணக்கம்
அன்பின்,
தமிழினி
Comment by தமிழினி — April 21, 2008 @ 3:12 am |