ஒரு பார்வை

June 25, 2006

.NET vs J2EE

Filed under: ASP/ ASP.NET — CAPitalZ @ 5:38 pm

இவை இரண்டுமே ஒரு விடையத்தில் பொதுவானவை. இரண்டுமே programming language அல்ல. ஆனால் இரண்டுமே programming பண்ணுவதற்கு தேவையான விதிமுறைகளைக் கொண்டவை. அதாவது ஒரு framework என்று சொல்வார்கள். தூணைக் கட்ட முன் கம்பிப் பிணைப்பை வைப்பார்களே அதே போல் தான்.

சரி அந்த கம்பிப் பிணைப்பை வைத்த பின் cement போடுவது போல் தான் இந்த framework இக்குள் எழுதப்படும் programming language. இவ் விதிகள் யாவும் ஒரு மென்பொருளை உருவாக்குவதற்கு உதவும்.சில பொது விதிகளை உருவாக்கி, மேலதிக உதவி மென்பொருள் கோப்புக்களையும் உருவாக்கி, இப்படியான மேலதிக உதவி மென்பொருள் கோப்புகளை எப்படி பாவிக்க வேண்டும் என்று விதிகளை உருவாக்கி, எப்படி பெயரிட வேண்டும் என்று விதிகள் இட்டு, எப்படி மென்பொருள்களுக்கிடையே தகவல் பரிமாறப்பட வேண்டும் என்று வரையறுத்து மேலும் இவ்வாறான பல விதிமுறைகளுடன் ஒட்டுமொத்த விதிமுறைகளே இந்த frameword. இப்படியான விதிமுறைகள் தான் தற்போதைய நவீன மென்பொருள் தயாரிப்பிற்கும், பிறகு அதைப் பேணிப் பாதுகாத்து மேலும் பல செயற்பாடுகளை சேர்பதற்கும், பிழைகளை திருத்திக் கொள்வதற்கும் இலகுவாக வழி வகுக்கின்றன.

J2EE தனது programming language ஆக JAVA ஐ உபயோகிக்க வேண்டுகிறது. JAVA அதற்கே உரிய plateform independent சலுகை உடையது. அதாவது எந்த கணினி தளத்திலும் [OS] JAVA மென்பொருட்கள் வேலைசெய்யக் கூடியவை. JAVA வில் மென்பொருள் செய்து அதை compile பண்ணினால் அது நீங்கள் எழுதிய code அத்தனையையும் அந்த கணினிக்கு ஏற்றவாறு மாற்றுவதில்லை. மாறாக, கணினிக்கு சற்று மேல் தர மொழிக்கு மாற்றும் [assembly code]. JAVA இதை தனக்கு மட்டும் விளங்கிக் கொள்ள ஏற்பவாரு எழுதும் [bytecode]. இதை நீங்கள், கணினி தள [OS] முக்கியத்துவம் இன்றி, எந்த கணினியிலும் ஏற்றி மென்பொருளை இயக்கலாம். JAVA மென்பொருளை எந்த ஒரு கணினியிலும் வேலை செய்ய வைக்க அந்தக் கணினியில் JIT [Just In Time] Compiler மட்டுமே இருந்தால் போதுமானது. JAVA தனது சக படைப்புக்களான JAVA beans, JAVA servlets, JAVA applets என்று எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கிறது இந்த J2EE மூலம்.

J2EE என்பது ஒரு மிகப் பெரிய அளவில் செய்யப்படும் மென்பொருளுக்கு ஏற்ப விதிகள். ஒரு சிறிய அளவிலான மென்பொருளென்றால் J2SE என்ற விதிகளையும், அதையே ஒரு செல்பேசியிற்கு செய்வதென்றால் J2ME என்ற விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்று ஒரு கோட்பாடு விதித்திருக்கிறார்கள்.

Microsoft, எப்போதுமே எதையும் முதலில் செய்தது கிடையாது. சந்தையில் எது நன்றாக விற்பனை ஆகிறது என்று ஆற அமர பார்த்துவிட்டு அதை தானும் செய்து வெளியிடுவார்கள். Internet Explorer [Netscape இற்குப் பின்பு], Windows NT [Novell இற்குப் பின்பு] என்று பலதைச் சொல்லலாம்.

இந்த வகையில், J2EE இன் வெற்றிக்குப் பின் தனது தாயாரிப்பான .NET ஐ வெளியிட்டுள்ளது. காப்பி அடித்தாலும், அவர்களுக்கே உரிய பாணியில், மேலும் அதற்கு மெருகேற்றி தங்கள் கணினித் தளங்களிலும் தங்கள் மென்பொருள்களிலும் மட்டுமே வேலை செய்யக் கூடியதாக செய்திருக்கிறார்கள். அவர்கள் கணினித் தளமே உலமெங்கும் அதி கூடிய அளவில் பாவிப்பதால், இவர்களுக்கு இது ஒரு பின்னடைவே அல்ல. உண்மையைச் சொல்லப் போனால், இதனால், அவர்களின் தயாரிப்புகளே மேலும் விற்பனையாகும்.

இந்த .NET உம் JAVA வின், நேரடியாக கணினிக்குத் தேவையான programming code இல் மாற்றாமல் ஒரு இடைப்பட்ட மொழிக்கு மாற்றுகிறது. இவர்கள் இதை bytecode என்று பெயரிடாமல் “Intermediate Language” [IL] என்று பெயரிட்டுள்ளார்கள்.

இந்த .NET இல் programming பண்ணுவதற்கு அவர்கள் ஒரு மென்பொருள் வெளியிட்டு இருக்கிறார்கள் [Visual Studio .NET]. இதில் தானாகவே குறுகிய செயற்பாட்டிற்கு தேவையாக programming code ஐ தாயாரித்துத் தரும். இதனால் நீங்கள் உங்களது நேரத்தை மிச்சப் படுத்தலாம். இந்த Visual Studio .NET இல் தானாக தயாரிக்கப் படும் JavaScript codes, Internet Explorer இல் மட்டுமே வேலை செய்ய வல்லவை. இந்த .NET framework ஐ Windows கணினித் தளங்களிலேயே ஏற்றிக் கொள்லலாம். அதாவது, .NET இல் செய்யப்படும் மென்பொருட்கள் யாவும் Windows தளங்களிலேயே இயங்கும் [Microsoft வேறு கணினித் தளங்களுக்கும் .NET கொண்டு வரப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்].

.NET விசேடம் என்னவென்றால், நீங்கள் .NET framework இல் VB இல் தான் coding பண்ண வேண்டும் என்றில்லை. C++, C#, J#, COBOL, FORTRAN, PYTHON என்று ஒரு கணினி மொழிப் பட்டாளத்திலேயே நீங்கள் எழுதலாம். அதுவும் பல மொழிகளைக் கொண்டு ஒரு மென்பொருள் தயாரிக்கக் கூடிய வல்லமை .NET கொண்டுள்ளது. அதாவது நீங்கள் ஒரு பகுதி மென்பொருளை [module] C++ எழுத உங்கள் நண்பர் மற்றய பகுதியை COBOL இல் எழுதி மென்பொருளைத் தயாரிக்கலாம். அப்போ, இப்போது அரிதாகி வரும் COBOL, FORTRAN, மொழி வல்லுனர்கள் .NET ஆ JAVA ஆ என்னும் போது .NET ஐயே தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகம்.

இன்னொறு விசேடம் என்னவென்றால், Microsfot C# என்னும் கணினி மொழியை வெளியிட்டுள்ளது. இந்த மொழியை உருவாக்க, உலகத்திலுள்ள ஏனைய கணினி மொழி வல்லுனர்களின் ஆலோசனை எடுக்கப்பட்டதாம். எல்லா மொழியின் சங்கமமே C# என்று கூறப்படுகிறது. C++ இன் செயற் திறன், C++ இன் pointer அகற்றப்பட்டு விட்டது, JAVA இன் garbage collector, VB இன் easy to create visualization என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால் VB, C++ ஐப் போல் செயற் திறன் அற்றது என்று சொல்பவர்களுக்கு இனி C# பதிலாக சொல்வார்கள்.

இவை போன்ற மிகவும் user friendly features மற்றும் Microsoft இன் கணினி ஆதிக்கத் திறன் என்பவற்றால், .NET முதலிடம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். அதற்காக J2EE அழிந்து போகுமென்றில்லை. அதுவும் ஒரு புறத்தில் இருக்கும். இதனால் C#.NET மற்றும் VB.NET படித்தல், அது சம்பந்தமாக வேலை பார்த்தல் மிக நன்று என்று நினைக்கிறேன்.

 

.Net் சம்பந்தமான வேறோர் இடுகை
.net பிறந்த கதை

_____
CAPital

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: