ஒரு பார்வை

June 13, 2006

தமிழ் ஒருங்குறி ?! -8

Filed under: Tamil Unicode — CAPitalZ @ 2:51 pm

ஓம் தமிழில் முதலிலேயே ஏற்றவில்லை என்பது அல்ல எனது வாதம். ஒவ்வோர் மொழிக்கும் ஒவ்வோர் சிறப்பு எழுத்துக்கள் இருக்கின்றன. அவை அம்மொழிக் காரர்களே ஏற்ற வேண்டும். இதில் ஓம் ஏன் முதலிலேயே இல்லை என்பது ஒரு குற்றமே அல்ல.


ஒவ்வொரு சாப்ட்வேரும இடிக்கிறதென்றால், நாம் ஏன் ஓபன்சோர்ஸ் அமைப்பு ஒன்றை அமைத்து பேட்சுகள் தயாரித்து வழங்கக் கூடாது? அல்லது சம்பந்தப் பட்ட நிறுவனங்களிடம் சுட்டிக்காட்டக்கூடாது? ”

ஐயா, அது இடிக்காமல் முதலிலேயே செய்ய வழி இருந்தும் செய்யவில்லை என்பது தான் எனது வாதம்.

பூச்சியை தோழில் விட்டு விட்டு, ஐயோ பூச்சி ஐயோ பூச்சி என்று சிலர் கத்துகிறார்கள்[ people who say, tamil is not visible in all softwares].

பூச்சி தோழில் உள்ளது, இதற்காக நாங்கள் எல்லோரும் ஒரு கவசம் அணியலாம் என்கிறார்கள் வேறு சிலர் [people who say we can correct this with a new algorithm]

பூச்சி தோழில் உள்ளது, எனது கவசம் உனது கவசத்தை விட மேன்மையானது ஒரு விதத்தில் என்றும், வேறு விதத்தில் வேறு ஒரு கவசம் மேன்மையானது என்றும் வாதிடுவார்கள். இதில் தமிழர் ஒற்றுமை என்று பேசுபவர்கள், தமிழர் ஒற்றுமை கெட்டுப் போக காரணம் அந்த பூச்சி என்று ஏன் சிந்திக்கத் தவறுகிறார்கள்?

நான் சொல்கிறேன், இந்தப் பூச்சியை முதலிலேயே தோழில் விடாமலிருந்திருந்தால் பின்பு தமிழர் ஒற்றுமை சீர் கெடுகுதென்று ஏன் பேச வேண்டும்?

பூச்சியை விட்ட படியால் தானே ஐயா இப்போ என் கவசம் உன் கவசம் என்று ஆளுக்காள் சொல்கிறார்கள் [new algorithms to correct the problem]

தமிழர் ஒற்றுமையை, பிரச்சினை வந்த பின் தான் கூவி அழைக்க வேண்டுமென்றில்லை. பிரச்சினையை வராமலே தடுக்கவும் உதவியிருக்கலாம்.

ஒருங்குறியில் தமிழை மாற்றி அமைக்கச் சொல்லி நான் கேட்கவில்லை. ஏன் தமிழ் நாடு அரசாங்கமே கேட்டாலும் அதை அவர்கள் செய்யமாட்டார்கள்.

நான் சொல்வதெல்லாம், தமிழ் அதில் தெரியவில்லையே இதில் தெரியவில்லையே என்று கத்துகிறவர்களும், தமிழை ஏன் இன்னும் முன்னுக்கு கொண்டு வர இல்லையே என்று கூறுபவர்களும், தமிழைத் தெரிய வைக்க அங்கே உதவி கேளுங்கள், இங்கே மடல் அனுப்புங்கள் என்பவர்களும் தமிழுக்கு ஏன் இந்தப் பின்னடைவு என்று அந்த அடிப்படைப் பிரச்சினை இது தான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். அதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும்.

தமிழர் ஒற்றுமை யாரால் கெட்டது? கவசம் தயாரிப்பவர்களான தமிழர்களாலா அல்லது அந்தப் பூச்சியை தமிழின் தோழில் விட்ட இந்திய அரசாங்கத்தாலா?

ஒவ்வொறு முறையும், அந்த மென்பொருளில் தமிழ் தெரியவில்லை, இந்த மென்பொருளில் தமிழ் தெரியவிலை. அதனால் நம் தமிழைத் தெரியவைக்க நாங்கள் முயற்சிக்கிறோம். தமிழர்கள் ஒன்றுபட்டு தமிழை எழுப்ப வேண்டும் என்னும் வாக்கியங்களில் ஏதோ தமிழ் மொழி கணினியில் தெரிய வைக்க ஒரு கடினமான மொழி போல் தோற்றுவிக்கிறார்கள். அந்தக் கடினத்தையும் மீறி தமிழ் தெரிய வைக்க எல்லாத் தழிழரும் ஒன்றுபட வேண்டும் என்பதுபோல் தெரியும்.

இப்படி சில காலமாக, ஒருங்குறி வந்த பின்பு, தமிழ் எழுத்துக்கள் எல்லா மென்பொருளிலும் தெரியாமல் இருப்பது ஒரு பின்னடைவு தானே. எழுத்தை தெரிய வைப்பது மாத்திரம் அல்ல கணினியில் ஒரு மொழியின் செயற்பாடு. அதற்கு மேல் எவ்வளவோ ஒரு மொழியின் அடிப்படையில் பல ப்ரொcஎச்சிங் செய்யலாம். அவை எல்லாவற்றிற்கும் ஒரு புது மாற்று வழி கண்டுபிடித்து அதை சட்டபூர்வமாக்க இன்னும் சில கால பின்னடைவு. இந்த இடைவெளியில், பல தகுதரங்கள் வந்துவிடும் வெவ்வேறு மென்பொருளாளர்களிடமிருந்தும். தமிழர் ஒற்றுமை ஓங்கட்டும்!

பொறுப்பான பதவியிலிருக்கும் மனிதர்கள் பொறுப்பாக நடந்து கொள்ளாத படியால்; தமிழை கணினிக்கு கடின மொழியாக்கியது ஏன் என்று தட்டிக் கேட்க முதுகெலும்புள்ள மனிதர்கள் பொறுப்பான பதவியில் இல்லாத படியால்; தமிழனுக்கு என்றொரு பிரதிநிதி பலமாக இல்லாத படியால்; தமிழருக்காய் குரல் கொடுப்பதென்பதை விட, அரசியல் இலாபம் பார்க்கும் மனிதர்களால்; தமிழ் துவண்டுகொண்டு போகிறது.

” க‌வ‌லையே வேண்டாம் ‘த‌மிழ் தெய்வ‌மொழி அம்மொழி என்றும் அழியாது அழிக்க‌வும்
முடியாது. எத்த‌னை த‌டைக‌ளையும் தாண்டி அது இன்றும் உல‌க‌ அர‌ங்கில்
ஒலிக்கின்ற‌து..”

இப்படிச் சொல்லிச் சொல்லித் தான் அகண்ட பாரதத்தில் இருந்த மொழி [Afganistan to Indonesia, Thailand and Himalay to Sri Lanka] சுருங்கி ஒரு நாட்டின் ஆட்சி மொழி கூட இல்லாமல் உலக உருண்டையில் எல்லா ஓட்டைகளிலும் தொத்திக் கொண்டு நிக்கிறது.

யாரொ சொன்னது போல்
“தமிழின் பெருமை அதன் முதுமையில் இல்லை, வளர்ச்சியில் உள்ளது”

வளர்வதற்குத் துரோகங்கள் தட்டிக் கேட்கப்பட வேண்டும்.

 

பாகம் – 09 >>

<< Part – 07

_____
CAPital

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: