அ) இந்தியாவிலும், வட ஆபிரிக்காவிலும் நடந்தது பெரும்பான்மை இனத்தோர் சிறுபான்மை இனத்துக்கு எதிரானது. தமிழீழத்தில் மாறானது.
ஆ) தமிழீழம் தனி நாடாக வேண்டுமா வேணாமா என்று மொண்டனீக்கிறோவில் நடந்தது போல் ஒரு தேர்தலை வைக்க சிங்கள அரசு என்றைக்கும் விட்டதில்லை. அப்படி ஒரு முறை ஏனும் தேர்தல், இப்போதில்லை, 10 வருடம் முன்பு வைத்திருந்து தோல்வியுற்றிருந்தாலும், நாங்கள் ஆயுதமேந்தி இருக்க மாட்டோம்.
இ) தாய், தந்தை, உற்றார், உறவினர் எல்லோரும் இறக்க தனியனாய் நிற்கும் சிறுவன் இராணுவத்தைக் கண்டால் கல்லால் எறிவான். வலிமை தேவையில்லை. தானாகவே வரும். சிறுவரை படையில் சேர்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டுபவர்கள், சிறுவர்கள் ஏன் படையில் சேர முயற்சிக்கிறார்கள் என்று சிந்திக்க தவறுகிறார்கள்.
ஈ) “உலகம் அடி வாங்குபனுக்கே அனுதாம் செலுத்தும்.” ஆமாம் அது சரி தான். தமிழீழம், எப்போது எத்தியோப்பியா, சோமாலியா போல் வருகிறதோ அப்போது தான் உலக நாடுகள் ஏதோ தாங்கள் பெரும் உதவி செய்வதாக வருவார்கள். UN படை சோமாலியாவிலிருந்து திருப்பி அனுப்பப் பட்டமை அந்நாட்டு மக்களுக்கு இருந்த வெறுப்பே காரணம்.
உ) கொலை செய்யப் போகிறார்கள், காப்பாற்றுங்கள் என்னும்போது கணக்கெடுக்காமல், பிணமான பின், வருத்தமடைகிறோம், துக்கப்படுகிறோம் என்று சொல்லத் தான் உலக நாடுகள். கிட்டடியில், இந்தியாவும் இவ்வாறு ஒரு அறிக்கை விட்டிருந்தது.
ஊ) தமிழர்களுக்கு என்று ஒரு பிரதிநிதியே இருத்தல் வேண்டும். பலர் இருந்தால், பாலஸ்தீனம் போல் தான், பல இயக்கங்களின் ஒற்றுமை இன்மையால் தோல்வியுறும். இருக்கும் ஒரு பிரதிநிதியும் கட்டுக்கோப்பான, வலிமை மிக்கதாக இருக்க வேண்டும். இந்தியத் தமிழருக்கு ஒன்று ஒரு “தமிழ் நாடு”, அரசாங்கம், ஆட்சி மொழி; இவ்வளவு இருந்தும் உங்களால் ஒருங்குறியில் தமிழை சரியாக ஏற்ற முடியவில்லையே! என்ன காரணம் என்று நீங்கள் தான் விடை அறிய வேண்டும்.
எ) ஈழ விடதலை 1950 இல் இருந்தே காந்தி வழி, அறவழிப் போராட்டமகத் தான் தொடங்கியது. 1983 இக்குப் பிற்பாடே ஆயுதவழிப் போராட்டமாக மாறியது.
______
CAPital
wordings are really great, like a poet…
you have some good points.
keep going
thank you
Comment by Mathew — June 11, 2006 @ 7:26 pm |
tamil elam valka valka
Comment by tamilarsu — July 1, 2006 @ 9:08 am |
tamil valka velka
Comment by tamilarsu — July 1, 2006 @ 9:10 am |
[…] பாகம் – 03 >> […]
Pingback by ஒரு பார்வை » Blog Archive » நாதியற்ற தமிழர் நாம் - 2 — July 12, 2007 @ 8:45 am |