எதிர்காலத்தில் ஒருங்குறியிலேயே சகல கணினி செயற்பாடுகளும் இருக்கும். தற்சமயம் ASCII இருக்கும் முறை மாற்றப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் நீங்கள் india.com, tamil.com என்று ஆங்கிலத்தில் இணையத்தள முகவரி இடாமல் இந்தியா.காம், தமிழ்.காம் என்றே தமிழில் எழுதுவதற்கு இந்த ஒருங்குறி தான் காரணம். சீன இனத்தவர் சீன மொழியில் இணயத்தள முகவரி உருவாக்கும் போது நாம் ஆங்கிலத்தில் தான் உருவாக்கிக்கொண்டிருப்போம் என்பது மறுக்கமுடியாத உண்மை.
உலகத்திலுள்ள அனைத்து வலையக சேவை தருபவர்களும் தமிழ் போன்ற இரண்டாம் ரக ஒருங்குறி செயற்பாட்டிற்கு அனுமதி தரும்போது மாத்திரமே, நாமும் தமிழில் இணையத்தள முகவரி உருவாக்கலாம்.
இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்; அப்போது உலகிலுள்ள மற்றய மொழிகள் எவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்கும்; மற்றய மொழிகளில் ஏற்கனவே எவ்வளவு resources உருவாகியிருக்கும்; முக்கியமாக எவ்வளவு பேர் தமிழை விரும்புவார்கள் மற்றய மொழிகளை விட என்பது எதிர்காலந்தான் விடை தர வேண்டும்.
_____
CAPital
very nice blog!mary
Comment by Blogs, news and more! — January 10, 2007 @ 8:37 pm |